ஜமால் முஹம்மது கல்லூரி நிறுவனர் நாள் விழா: வளைகுடா பகுதி முன்னாள் மாணவர்கள் பங்கேற்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஜமால் முஹம்மது கல்லூரி நிறுவனர் நாள் விழா: வளைகுடா பகுதி முன்னாள் மாணவர்கள் பங்கேற்பு

ஜூலை 14,2021 

Comments

துபாய் : திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி நிறுவனர் நாள் விழா 11.07.2021 ஞாயிற்றுக்கிழமை காணொலி வழியாக நடந்தது. இந்த விழாவில் வளைகுடா பகுதி முன்னாள் மாணவர்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த விழாவுக்கு கல்லூரியின் தலைவர் எம்.ஜே. ஜமால் முஹம்மது பிலால், செயலாளர் மற்றும் தாளாளர் டாக்டர் ஏ.கே. காஜா நஜீிமுதின், பொருளாளர் எம்.ஜே. ஜமால் முஹம்மது, உதவிச் செயலாளர் முனைவர் கே. அப்துஸ் சமது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். இஸ்மாயில் முகைதீன் தலைமையுரை மற்றும் வரவேற்புரை நிகழ்த்தினார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியர் அருணன் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் முனைவர் கே.என். அப்துல் காதர் நிஹால், விடுதி நிர்வாக இயக்குநர் முனைவர் கே.என். முஹம்மது பாஜில், கூடுதல் துணை முதல்வர் முனைவர் எம். முஹம்மது சிஹாபுதீன், பெண்கள் இயக்குநர் ஜெ. ஹாஜிரா பாத்திமா உள்ளிட்டோர் வாழ்த்துரை நிகழ்த்தினர்.

துணை முதல்வர் முனைவர் ஏ. முஹம்மது இப்ராஹிம் நன்றியுரை நிகழ்த்தினார். பேராசிரியர் கா. முஹம்மது இஸ்மாயில், முனைவர் மு. செய்யது அலி பாதுஷா உள்ளிட்டோர் ஒருங்கிணைப்பு பணிகளை சிறப்புடன் செய்திருந்தனர்.

இந்த விழாவில் ஐக்கிய அரபு அமீரக முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் துபாயிலிருந் து முதுவை ஹிதாயத், சவுதி அரேபிய முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் ரியாத் முஹம்மது இம்தியாஸ், ஜெத்தா சிராஜ் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ம், இந் தியாவில் இருந்தும் முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா



Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)...

அரிசோனா தமிழ்ப் பள்ளிகள்

அரிசோனா தமிழ்ப் பள்ளிகள்...

அரிசோனா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் (2021)

அரிசோனா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் (2021)...

ஒமஹா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் (2021)

ஒமஹா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் (2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us