பஹ்ரைனில் அடைத்து வைக்கப்பட்ட பெண்கள் மீட்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பஹ்ரைனில் அடைத்து வைக்கப்பட்ட பெண்கள் மீட்பு

ஜூலை 15,2021 

Comments

மனாமா, பஹ்ரைன்: கடந்த பிப்ரவரி மாதம் முகவர்கள் மூலமாக பஹ்ரைனுக்கு வீட்டுவேலைக்காக வந்தடைந்த திருமதி. வள்ளி, திருமதி வடிவுக்கரசி, திருமதி வேளாங்கண்ணி ஆகிய மூவரும் தங்களை வேலைக்கு அமர்த்தியவர்களின் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர். உணவு கொடுக்கப்படாமல் அடைத்து வைக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் வெளியிட்ட வாட்ஸ் ஆப் காணொளி, சமூகவலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, சென்னையில் இவர்களின் குடும்பத்தினரை பத்திரிகையாளர்கள் தொடர்புகொண்டதன் மூலமாக இச் செய்தி, தமிழக நாளிதழில் வெளியானது.

சென்னையைச் சேர்ந்த சமூகவியலாளரும் ஏ.ஐ.எம்.எஸ் பொதுச் செயலருமான கன்யா பாபு அவர்களது முயற்சியினால் பஹ்ரைனில் இயங்கி வரும் இந்தியத் தூதரகத்திற்கு இச்செய்தி அறிவிக்கப்பட்டது. கடந்த 10ம் தேதி இரவு, இவர்கள் மீட்கப்பட்டு பஹ்ரைனில் உள்ள சமாஹீஜ் காவல்நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டனர்.இவர்களுக்கு மொழிபெயர்ப்பு உதவிக்காக அன்னை தமிழ் மன்ற நிர்வாகிகள் திரு. செந்தில் மற்றும் திரு. அருண் ஆகியோர் காவல் நிலையம் சென்றனர். 

விசாரணைக்குப் பிறகு, நள்ளிரவில் இவர்கள் அங்கிருந்து அனுப்பப்பட்டபோது, இவர்கள் தங்குவதற்கு அன்னை தமிழ் மன்றம் தேவையான ஏற்பாடுகள் செய்து கொடுத்து, உணவளித்து உதவி செய்து வந்தது.பஹ்ரைன் வெளிநாட்டவர் சட்ட மையத்தின் தலைவர் திரு. சுதிர் திருநிலத் அவர்களது முயற்சியின் பேரில், பஹ்ரைனில் சமூக நற்பணிகளைச் செவ்வனே செய்து வரும் அன்னை தமிழ் மன்றத்தின் முழு ஒத்துழைப்போடும், ஐ.சி.ஆர் எஃப் அமைப்பின் பொறுப்பாளர் திரு. அருள்தாஸ் மற்றும் திருமதி நிஷா ரங்கநாதன் அவர்களின் உதவியோடும், இந்தியத் தூதரகத்தின் தூதுவர் மேதகு பியூஷ் ஸ்ரீவத்ஸவா அவர்களின் பேருதவியினாலும் இதர தமிழ் அமைப்புகளின் ஒத்துழைப்பினாலும் இவர்கள் 14-07-2021 அன்று பத்திரமாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இவர்களுக்குரிய பயணச் செலவை இந்தியத் தூதரகம் பொறுப்பேற்றுக் கொண்டது. இவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை அன்னைத் தமிழ் மன்றத்தின் நிர்வாகிகள் பொறுப்பேற்று வழங்கினார்கள். தமிழர் என்ற மந்திர வார்த்தையால் இணைக்கப்பட்டு இதற்கு உதவிகள் செய்த ஒவ்வொரு நல்லுள்ளங்களுக்கும், இந்தியத் தூதரக அதிகாரிகள் அனைவருக்கும், மற்றும் தமிழக அரசுக்கும், தமிழகக் காவல்துறைக்கும், அன்னை தமிழ் மன்றம் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

- நமது செய்தியாளர் பெ.கார்த்திகேயன்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)...

அரிசோனா தமிழ்ப் பள்ளிகள்

அரிசோனா தமிழ்ப் பள்ளிகள்...

அரிசோனா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் (2021)

அரிசோனா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் (2021)...

ஒமஹா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் (2021)

ஒமஹா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் (2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us