ரியாத் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் மருத்துவ உதவி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ரியாத் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் மருத்துவ உதவி

ஜூலை 16,2021 

Comments

ரியாத் : தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 14 ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு ரியாத்தின் எக்ஸிட்-21ல் அமைந்துள்ள அல்-இமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சுயநினைவு பாதிக்கப்பட்டுள்ளதால் அவரைப் பற்றிய சில விபரங்கள் மட்டும் (பெயர் ராஜேஷ் கண்ணா, வயது-32, த.பெயர் பால் சுவாமி , தாயார் நாகஜோதி, ஊர் அருப்புக்கோட்டை) அளித்ததாகவும், விபத்தின் மூலம் ஒரு காலை இழந்துவிட்டதாகவும் மற்றொரு காலையும் இழக்கும் சூழ்நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது.

இந்த தகவலை கண்ட இந்தியன் சோசியல் ஃபோரத்தின் ரியாத் நிர்வாகிகள் உறுப்பினர் சேக் அவர்களை ராஜேஷ் கண்ணாவை சந்தித்து மேலதிக விபரங்களை பெற்று வருமாறு கூறினர். இந்தியன் சோசியல் ஃபோரம் உறுப்பினர் ஷேக் கொடுத்த தகவலின் அடிப்படையில் விபத்தில் படுகாயமடைந்த ராஜேஷ் கண்ணாவின் குடும்பத்தினர்களை தொடர்பு கொண்ட இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் ரியாத் நிர்வாகிகள் தகவலை தெரிவித்து ஆறுதல் தெரிவித்ததுடன் பூரண குணம் அடையும் வரை தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும் உறுதியளித்தனர்‌.

இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் ரியாத் நிர்வாகிகளின் ஆலோசனைக்கு பின் மருத்துவமனைக்கு சென்ற உறுப்பினர் ஷேக் அவர்கள் ராஜேஷ் கண்ணாவிற்கு அறுவைசிகிச்சை செய்து சிகிச்சை அளிக்கும் வரை உடனிருந்து கவனித்தார். மேலும் பூரண குணம் அடையும் வரை அவருக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு இந்தியன் சோஷியல் ஃபோரம் தீர்மானித்துள்ளது.

அறுவை சிகிச்சை முடிந்த செய்தியினை அவரது குடும்பத்தினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது அவரது குடும்பத்தினர்கள் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் உறுபினர்களுக்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் ரியாத் இந் தியன் சோசியல் ஃபோரத்தின் பணிகளுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்., 2 ல் "தமிழ் அறிஞர்கள் நாள்" விழா

அக்., 2 ல் "தமிழ் அறிஞர்கள் நாள்" விழா...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us