சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் மருத்துவ உதவி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் மருத்துவ உதவி

ஜூலை 20,2021 

Comments

உலகெங்கும் கொரோனா தொற்றுப் பரவல் இன்னும் குறைந்தபாடில்லை. தனியார் நிறுவனங்களும் அரசும் தன்னால் இயன்ற பணிகளையும் உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறது. உலகமெங்கும் இது பொருந்தும்.இந்நிலையில் பல வகையில் உதவிகள் செய்து கொண்டிருக்கும் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் மீண்டும் ஓர் பேருதவி ஆற்றியுள்ளது.

சென்னை தாம்பரத்தில் உள்ள அரசு மார்பு சிகிச்சை மருத்துவமனைக்கு 12 பல்ஸ் ஆக்ஸிமீட்டர் மானிட்டர்களை வழங்கியுள்ளது பாராட்டத்தக்கது. இதற்காக சான் ஆண்டோனியோ வாழ் தமிழ் மக்கள் 6000 டாலர்களை நன்கொடையாக அளித்துள்ளனர்!உயிர் காக்கும் கருவி வழங்கும் இம்முயற்சியில் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் ஈஸ்ட்டும் இணைந்து பயணித்தது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தில் தொடர்ந்து நற்பணிகளை மேற்கொண்டு வரும் சான் ஆண்டோனியோ தமிழ் சங்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்!

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூலை 25 ல் சத்யநாராயண் கதை - குரு பூர்ணிமா

ஜூலை 25 ல் சத்யநாராயண் கதை - குரு பூர்ணிமா...

23 ல் கலிபோர்னியா ரிவர்சைடு ஸ்ரீ லட்சுமி நாராயண் மந்திர் ஷ்ராவன் மாத நிகழ்வு

23 ல் கலிபோர்னியா ரிவர்சைடு ஸ்ரீ லட்சுமி நாராயண் மந்திர் ஷ்ராவன் மாத ...

அரிசோனா தமிழ்ப் பள்ளிகள்

அரிசோனா தமிழ்ப் பள்ளிகள்...

அரிசோனா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் (2021)

அரிசோனா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் (2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us