சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக ஜூலை மாதக் கதைக்களம் நாவல் பயிலரங்கு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக ஜூலை மாதக் கதைக்களம் நாவல் பயிலரங்கு

ஜூலை 25,2021 

Comments

சிங்கப்பூர்த் தேசிய வாசிப்பு இயக்கத்தின் முக்கியமான நிகழ்வான வாசிப்புவிழாவிற்காக தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஜூலை மாதக் கதைக்களம் நாவல் பயிலரங்காக மலர்ந்தது.

இப்பயிலரங்கில் சாகித்திய அகாடமி விருத்தாளர் சோ.தர்மன் பங்கேற்பாளர்களுடன் உரையாடினார். சாகித்திய அகாடமி விருது பெற்ற தன்னுடைய ‘சூல்’ நாவலுக்குத் தான் செய்த ஆராய்ச்சி வழிமுறைகளையும் அனுபவங்களையும் கதைக்கள உறுப்பினர்களோடு பகிர்ந்து கொண்டார். மேலும், ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சரியான வழிமுறைகளையும் ஆராய்ச்சியில் கண்டறியும் விஷயங்களையும் புனைவில் எப்படி எழுதுவது என்றும் விளக்கினார்.

நாவல் என்பது தமிழ் இலக்கியப் பரப்பில் பரந்த தளத்தைக் கொண்டது. சிறுகதைகள், கவிதைகள் மற்றும் அனைத்தையும் விட, ஒரு படைப்பாளி தன் முழுமையான கற்பனைகளையும், காட்சிகளின் அழகியலையும், கடைசி சொட்டுநீர் வரை அனைத்தையும் ஒரு நாவலுக்குள் அடக்கிவிட முடியும். பல தலைமுறைகளின் வாழ்வியலைப் பதிவு செய்யக்கூடிய ஓர் இலக்கியத்தளம் நாவல். 'சூல்' நாவலின் மூலம் நீர்நிலைகள், கண்மாய்கள், ஊருணிகள், ஓடைகள் மற்றும் இயற்கையோடு இயைந்த அனைத்தும் மனிதகுலம் தழைப்பதற்கு இன்றியமையாதவை என்பதைத் தெளிவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார். நம்மைச் சுற்றி பல கதைகள் இருப்பதாகவும், கூர்ந்து அவதானிப்பதின் மூலம் நம் படைப்புகளைச் செம்மையாக்க முடியும் என்றும் அறிவுறுத்தினார். வாசகர்களின் கேள்விகளை அழகாகத் தொகுத்து கேள்வி, பதில் அங்கத்தைச் சிறப்பாக நெறிப்படுத்தினார் கழகத்தின் செயலாளர் கிருத்திகா.

தனது தலைமையுரையில் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் நா.ஆண்டியப்பன், சோ.தர்மனின் வெளிப்படையான உரையை வெகுவாகப் பாராட்டினார். நிகழ்ச்சியில் அவர் பகிர்ந்து கொண்ட கதைகளும் கருத்துகளும் கலந்து கொண்ட 120 வாசகர்களுக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்திருந்ததாகக் கருத்துரைத்தார். மேலும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் கதைக்களம் மகாகவி பாரதியார் மறைந்த 100 ஆண்டு விழாவாக அமையும் என்றும் அதனைப் பற்றிய மேல்விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறி தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.

ஜூலைமாதக்கதைக்களவெற்றியாளர்களின்விவரங்கள்:

மாணவர்பிரிவுவெற்றியாளர்கள்:

சுதர்சன்பாலாஜி, இராபிள்ஸ்கல்விக்கழகம் - ‘என்னால்முடியுமா?’

பொதுப்பிரிவு - சிறுகதையின்வெற்றியாளர்கள்:

முதல்பரிசு - உமாசங்கர் - ‘சைனாடீ’

இரண்டாம்பரிசு -  சியாம்குமார் - ‘புரிந்தேற்பு’

மூன்றாம்பரிசு -  அசோக்குமார் - ‘நட்பின்ஆழம்’

நூலறிமுகம்போட்டியின்வெற்றியாளர்கள்:

சியாம்குமார் – நூல்: தண்ணீர், நூலாசிரியர்: அசோகமித்திரன்

விமலாரெட்டி – நூல்: சூரியகிரகணத்தெரு, நூலாசிரியர்: கமலாதேவிஅரவிந்தன்

பிரதீபா – நூல்: ஆரஞ்சு, நூலாசிரியர்: அழகுநிலா

ஷோபாகுமரேசன் – நூல்: மூங்கில்மனசு, நூலாசிரியர்: இன்பா

பரிசுகளுக்குநிதிஆதரவு: ஆர்யாகிரியேஷன்ஸ்தமிழ்ப்புத்தகநிலையம் (சிங்கப்பூர்)


- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us