கொடை நிகழ்ச்சித்திட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கொடை நிகழ்ச்சித்திட்டம்

ஜூலை 26,2021 

Comments

திருகோணமலையின் மூதூர் பிரதேசத்திலுள்ள பாட்டாளிபுரம் கிராமத்திற்கு திருகோணமலை ரோட்ராக்ட் கழகத்தினால், ரோட்டரி கழகத்துடன் இணைந்து கொடை நிகழ்ச்சித்திட்டம் “ஈதலே நன்று” எனும் தொனிப்பொருளில் நடாத்தப்பட்டது. 

2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் திருமலை நகர் சமூகத்திடமிருந்து ஆடைகளும் புத்தகங்களும் பெருவாரியாக சேகரிக்கப்பட்டன. வறுமையினால் வாடும் பாட்டாளிபுரம் மக்களுக்காக பலரும் மனமுவந்து நன்கொடைகளை வழங்கியிருந்தனர்.

2021 ஆம் ஆண்டு ஜுலை 25ஆம் திகதி அன்று ரோட்ராக்ட் கழகத்தினர் பாட்டாளிபுரம் கிராமத்திற்கு சென்று சேகரித்த பொருட்களை கையளித்தனர் இத்திட்டத்தின் மூலம் 35க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயனடைந்தனர்.

திருகோணமலை ரோட்டரி கழக செயலாளர் திரு பிரபாகரன், ரோட்டரி கழக அங்கத்தவர் திரு. ரகுராம், ரோட்ராக்ட் கழக தலைவர் திரு. ஜீவ குஹகரன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

திருகோணமலை ரோட்ராக்ட் கழகத்தினரால் முன்னரும் மனிதம் நிகழ்ச்சித்திட்டம் மூலம் திருமலை நகரில் உள்ள வறியவர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 

- நமது செய்தியாளர் ஞானகுணாளன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்., 2 ல் "தமிழ் அறிஞர்கள் நாள்" விழா

அக்., 2 ல் "தமிழ் அறிஞர்கள் நாள்" விழா...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us