தாயகத்தில் வலி வாதை நீக்க வல்லினச்சிறகுகள், அட்லாண்டாவின் சிறு உதவி... | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தாயகத்தில் வலி வாதை நீக்க வல்லினச்சிறகுகள், அட்லாண்டாவின் சிறு உதவி...

ஆகஸ்ட் 03,2021 

Comments

   பெண்களின் படைப்பாற்றலை அடையாளம் கண்டு அவர்களைச் சிறப்பிக்கும் வகையில், 2020 ஆம் ஆண்டு, உலகப் பெண் கவிஞர் பேரவை, அமெரிக்காவில் உள்ள அட்லாண்டாவில், புதுச்சேரி ஒருதுளிக்கவிதை முனைவர் அகன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகப் பெண்களுக்காகப் பெண்களால் நடத்தப்படும் 'வல்லினச் சிறகுகள்' என்ற மாதாந்திர மின்னிதழ் வெளியிடப்பட்டு வருகிறது.

சமுதாயத்தில் ஏற்படும் இயற்கைச் சீரழிவுகளுக்கும் பேரழிவுகளுக்கும் துணை நிற்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், முனைவர் அகன் அவர்களின் வழிகாட்டுதலில், இந்தியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் பெண் கவிஞர்கள் இணைந்து நிதி திரட்டினார்கள். இத்திட்டப் பணியை அமெரிக்காவிலிருந்து இரம்யா ரவீந்திரனும், இந்தியாவிலிருந்து மஞ்சுளாகாந்தியும் ஒருங்கிணைத்தார்கள்.

புதுச்சேரி முதலமைச்சர் மூலம் நன்கொடை அளிப்பு:

சூலை 22, 2021 அன்று ₹50,000/- நன்கொடைக்கான காசோலை, புதுச்சேரி மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமி மூலம் ஏழை மக்களுக்கு நாள்தோறும் உணவளித்து வரும் வள்ளலார் சபைக்கு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வல்லினச் சிறகுகள் சார்பில் புதுச்சேரியின் முனைவர் பிரின்ஸ், இணைப் பேராசிரியர், அன்னை தெரசா கல்லூரி செய்திருந்தார். காசோலையைப் பெற்றுக்கொண்ட திரு. கோவிந்த் வல்லினச் சிறகுகளுக்கு நினைவுப் பலகை ஒன்றைப் பரிசாக அளித்தார்.

உயிர்வளி செறிவாக்கி (oxygen concentrator) கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பு: சூலை 27, 2021 அன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு. கே. பாலசுப்பிரமணியம் அவர்களிடம் ₹1,03,000/- நன்கொடையில் வாங்கிய உயிர்வளி செறிவாக்கி (oxygen concentrator) ஒப்படைக்கப்பட்டது. இது கொரோனா நோயாளிகளுக்குக் கொடுத்து உதவ வேண்டி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் புதுச்சேரியின் முனைவர் பிரின்ஸ், முனைவர் பெண்ணியம் செல்வகுமாரி, வி. இளவரசி சங்கர், ஜிப்மர், பரீதா, தன்னார்வலச் சட்ட ஆலோசகர் ஆகியோர் மற்றும் கடலூர் அரிமா சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் தம் உரையில் 'பெண்கள் இலக்கியத்தில் மட்டுமல்லாமல் சமூகத்திலும் இதுபோன்ற செயல்களில் ஆர்வம் காட்ட வேண்டும். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்' என்று மகிழ்ச்சியோடு சிற்றுரை ஆற்றினார்.

- ராஜிராமச்சந்திரன், அட்லாண்டா, அமெரிக்கா






Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us