சிங்கப்பூர் ஆலய ஆடி மாத சிறப்பு பூஜைகள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூர் ஆலய ஆடி மாத சிறப்பு பூஜைகள்

ஆகஸ்ட் 02,2021 

Comments

சிங்கப்பூர் ஈசூனில் பல இன மக்கள் வாழும் பகுதியில் 108 சக்தி பீடங்களுடன் சிம்மக் கொடியேந்தி அருளாட்சி புரியும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் வழக்கம் போல ஆடி மாதச் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

ஆகஸ்டு மூன்றாம் தேதி ஆடிப் பதினெட்டாம் பெருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது. ஆறாம் தேதி அக்கினிச் சட்டி வழிபாடு. சிங்கப்பூரிலேயே வேம்பு அம்மன் வழிபாடு நடைபெறுவது இவ்வாலயத்தில் மட்டுமே. ஒரு மண்டலம் காலம் வேம்பு அம்மன் ஜலவாசம் செய்து புனித நாளில் பிரதி்ஷ்ட்டை செய்யப்படும். அதில் அக்கினிக் கப்பறை வைக்கப்பட்டு ஆலயம் வலம் வந்து வழிபாடு நடத்தப்படும். பக்தர்கள் தாங்களாகவே வேம்பு அம்மனை வழிபட ஆலயம் ஏற்பாடு செய்து தரும்.

ஒன்பதாம் தேதி துர்க்கை அம்மன் பூஜை வெகு விமரிசையாக நடைபெற ஆலய நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ஆகஸ்டு பதினோராம் தேதி பால் குடம் – கும்பிடு தண்டம் – அங்கப் பிரதட்சணம் நடைபெறும் .பதின்மூன்றாம் தேதி ஆடிப்பூர விடையாற்றி பூஜை – நாக பஞ்சமி - நாகேஸ்வரிக்கு விசேஷ அபிஷேகம் – சிறப்பு ஹோமங்கள் நடைபெறவிருக்கின்றன. இருபதாம் தேதி வரலட்சுமி விரத சிறப்பு வழிபாடு நடைபெறும்.

இந்தப் புனித வைபவங்களில் பக்தப் பெருமக்கள் முன்பதிவு செய்து கொண்டு வழிபாடுகளில் பங்கேற்று அம்பிகையின் அருள் பெற்றுய்ய ஆலய நிர்வாகம் அன்புடன் அழைக்கிறது.

-நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us