திருகோணமலை றோட்டரிக் கழகத்தின் 43 ஆவது தலைவர் பதவியேற்பு நிகழ்வு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

திருகோணமலை றோட்டரிக் கழகத்தின் 43 ஆவது தலைவர் பதவியேற்பு நிகழ்வு

ஆகஸ்ட் 03,2021 

Comments

திருகோணமலை ரோட்டரி கழகத்தின் 43 ஆவது தலைவராக திரு த. அகிலன் அவர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு டைக் வீதியில் உள்ள றோட்டரி அலுவலகத்தில் 01.08.2021 - ஞாயிற்று கிழமை அன்று இடம் பெற்றது.

இவ் வைபவத்தில் திருகோணமலை ரொட்டறி கழக தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் , கழகம் சார்பில் வரவேற்பு உரை நிகழ்தினார். அவரது காலத்தில், திருகோணமலை ரோட்டரி கிளப் சிறப்பாக செயல் பட்டதாகவும் அதட்கு உதவிய தனது குழு உறுப்பினர்களுக்கு நன்றி கூறி கௌரவித்தார்.

செயலாளர் அருள் வரதராஜா 2020 - 2021 ஆண்டில் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைகள் பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை கொடுத்தார்.

இவ் நிகழ்ச்சியில் திருகோணமலை லிங்கநகர் ஸ்ரீ கோணலிங்கம் மகா வித்யாலயத்துக்கு ஒரு இரடடை மலசல கூடம் கையளிக்கப் பட்டது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பேராசிரியர் திரு வ. கனகசிங்கம் – பல்கலைக்கழக வளாக தலைவர் – (ரெக்டர்) கலந்து கொண்டார். இதன்போது கடந்த ஆண்டின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் புதிதாக தெரிவான தலைவர் திரு த. அகிலனுக்கு தலமைப்பதவியை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

பிரதம விருந்தினர் பேராசிரியர் திரு வ. கனகசிங்கம் அவரது உரையில் றோட்டரிக் கழகம் இன்னலுற்ற மக்கள் மத்தியில் சிறந்த சேவை புரிவதாக பாராட்டினார். மற்றும் திருகோணமலை மாவடட கல்வி நிலைமை வீழ்ச்சியுற்றுப்பதை புள்ளி விபரங்களுடன் எடுத்துக் கூறி, அதை நல்ல முறையில் சீர் படுத்துவதட்கு மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார் . அத்துடன் திருமலை வளாகத்தை எதிர்காலத்தில் தனிப் பல்கலைக்கழகமாக தரமுயற்றுவதட்கு அனைவரும் இணைந்து செயல் பட முன்வரவேண்டும் என்று எடுத்துரைத்தார்

அடுத்த தலைவராக தெரிவு செய்யப்படட திரு கிருட்ணதாஸ் நன்றியுரையை நிகழ்த்தினார

- நமது செய்தியாளர் ஞான குணாளன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us