‘கானகச் சட்டம்'-சான் ஆண்டோனியோ இளைஞர்கள் படைத்த திரைப்படம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

‘கானகச் சட்டம்'-சான் ஆண்டோனியோ இளைஞர்கள் படைத்த திரைப்படம்

ஆகஸ்ட் 05,2021 

Comments

  அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சான் ஆண்டானியோவில் படமாக்கப்பட்ட ஓர் படம்- ‘கானகச் சட்டம்’. முழுக்க முழுக்க கொரில்லா படமெடுக்கும் முறையில் இந்த படத்தை கிருஷ்ண குமார் மற்றும் யுசப் தயாரித்து இயக்கி உள்ளனர். யூசுப் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

தினமும் அலுவலகம் போகிற நண்பர்களால் தினசரி வேலைகளை முடித்த பிறகு நள்ளிரவு நேரங்களில் 90 நாட்கள் ஒன்றிணைந்து எடுக்கப்பட்டது.பின்பு இந்தியாவில் அனுபவம் நிறைந்த தொழில் நுட்ப கலைஞர்களால் இசை,கலர் கரெக்ஷன் மற்றும் கிராஃபிக்ஸ் சேர்க்கப்பட்டு படம் முழுமை பெற்றது .இந்த படத்தின் மொத்த பட்ஜெட் வெறும் 5 இலட்சம்.உழைப்போ எக்கச்சக்கம்!

படத்தை வெளியிட முடியாத கொரானா தொற்று காலத்தில் கடும் முயற்சிகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பல முன்னனி இயக்குநர்களை அறிமுகம் செய்த தயாரிப்பாளரும் இயக்குநருமான சி்.வி.குமார் அவர்களின் ஒடீடீ தளமான ரீகல் டாக்கிஸ் இந்த படத்தை வெளியிடுகிறார்கள்.

கதை சுருக்கம்:

ஒரு நாள் இரவில் போதைக்கு அடிமையான கணவன் தன் நண்பர்களோடு சேர்ந்து தான் செய்த பல குற்றங்களை மறைக்க முயலுகிறான். அதன் பின்பு நடக்கும் ஒவ்வொரு அசைவும் கதையின் கதாபாத்திரங்களின் வாழ்க்கையை மாற்றி போடுகிறது ! நைசாக கதையை கேட்க நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை,நீங்கள் படம் பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.இளைஞர்கள் ஆர்வமாக உள்ளனர்.

‘கானகச் சட்டம்’ உங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு வித்தியாசமான அனுபவத்தை தரும். நீங்கள் த்ரில்லர் பட ரசிகர்களாக இருந்தால் நிச்சயம் ஃபேவரைட் படம். பிற மொழி பேசுபவர்களுக்கு சப் டைட்டில் சேர்க்கப்பட்டுள்ளது

எழுத்து,தயாரிப்பு,இயக்கம்: கிருஷ்ணகுமார் கே ஜே - யூசுப் சுல்தான்

ஒளிப்பதிவு : கிருஷ்ண குமார் கே ஜே

படத்தொகுப்பு : கிருஷ்ண குமார் கே ஜே

இசை: நிர்மல் ராஜ்

பின்னணி குரல் வடிவமைப்பு : அருண் - கிருஷ்ண குமார் கே ஜே

பின்னணி குரல்: பரணி - அருண்

சப் டைட்டில் : வினாயக் மேவலால்

பென்சில் ஸ்கெட்ச்: அபிராமி

வசனம்: கிருஷ்ணகுமார் கே ஜே , யூசுப் சுல்தான், ரஞ்சித் குமார் (இறைவன் ..)

அனிமேஷன் -இபேக்ட்ஸ்: சிடி சதீஷ் ( உணவு சங்கிலி)

சவுண்ட் மிக்ஸ் : ஜெய்சன் ஜோஷ்

ஃபோலே: கண்ணன் கே

ட்ரோன் சாட்ஸ் : சவுரவ் பதக்

விசுவல் எஃபெக்ட்ஸ்: திலக் சரவணன், கிருஷ்ண குமார் கே ஜே

டி.ஐ.கலரிஸ்ட் : திலக் சரவணன்

கேரிகல்ச்சர்: ஹாரிஷ் வர்மண், யூசுப் சுல்தான்

நடிகர்கள்: யூசுப் சுல்தான், ஜான்சன் சாலமன், கார்த்திக் ஜீக்கி, மணி சங்கர், முகேஷ் சைலப்பன், கேப்ரியல் பெரஷ், ரஞ்சித் குமார்

தங்கள் கனவை நினைவாக்கி வெற்றியை காணத் துடித்துக் கொண்டிருக்கும் இத்திரைப்படக் குழுவினருக்கு தினமலர் சார்பாக வாழ்த்துகள்!


https://youtu.be/WErD-iCyvsg


- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்
Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us