பிரிஸ்பேனில் ஈஸ்வராலயாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி 2021 | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

பிரிஸ்பேனில் ஈஸ்வராலயாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி 2021

ஆகஸ்ட் 07,2021 

Comments

பிரிஸ்பேனின் ஈஸ்வராலயா கலைக்கூடத்தின் 40-வது ஆண்டு விழாவை, கடந்த 10 சூலை 2021 அன்று, ஃபாரஸ்ட் லேக் புனித ஜான் ஆங்கிலிகன் பள்ளி கலையரங்கில் நடைபெற்றது. கோவிட் கட்டுப்பாடுகள் மற்றும் அனைவரது பாதுகாப்பு கருதி, முகக் கவசம் துவங்கி பல்வேறு பாதுகாப்பு எற்பாடுகளுடன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆண்டின் நிகழ்ச்சித் தலைப்பு ‘சிவசக்தி லயம்’.

மந்திர புஷ்பாஞ்சலியுடன் துவங்கிய நிகழ்ச்சியில், சிவதாண்டவம், திருவிளையாடல், உமையவளின் சக்தி தாண்டவம், சக்தி கூத்து, சரஸ்வதி துதி மற்றும் ஜெயலக்ஷ்மி நடனங்கள் இசைக்கலைஞர்களின் நேரடி இசையில் இடம்பெற்றன. நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக ‘சப்தமாரிகைகள்’ நடனம் ஏழு சுரங்களில் பிரமரி, வைஷ்ணவி, மகேஸ்வரி, இந்திராணி, கௌமாரி, வராஹி மற்றும் சாமுண்டி அபிநயங்களுடன் இடம்பெற்றது. ‘அர்த்தநாரீஸ்வரர்’ நடனம் அனைவரது பாராட்டையும் பெற்றது.

கோவிட் கட்டுப்பாடுகளுக்கிடையிலும், பல்வித அசௌகரியங்களையும் பொருட்படுத்தாது நிகழ்ச்சியைத் திறம்பட தயாரித்தளித்த நாட்டியப்பள்ளியின் ஆசிரியை திருமதி மங்கா சுரேந்தர், அவரது மாணவியர்கள், அவர்தம் பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

- நமது செய்தியாளர் ஆ சோ ரெங்கநாதன்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மே 27 முதல் 29 வரை இலங்கையில் மகா சக்தி யோகம்

மே 27 முதல் 29 வரை இலங்கையில் மகா சக்தி யோகம்...

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us