உலகளாவிய இளந்தமிழர் குழு சென்னை தினத்தை இணையவழியில் நடத்தியது. விழா ஸ்ரீ மீனாக்ஷி தமிழ்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்தது. சென்னையின் வரலாற்றை பற்றி கோ அறக்கட்டளையை சேர்ந்த வசந்த் வெள்ளைதுரை மிகவும் விவரமாக எடுத்துக் கூறினார். அடுத்ததாக வி ஆர் ஆனந்த் அவர்கள் சென்னை அருகே உள்ள சென்ட் தாமஸ் மவுண்ட், மெரினா கடற்கரையில் உள்ள பெரிய கல் என்ற இடங்களைப் பற்றி எடுத்துரைத்தார்.
இந்த விழா பல்வேறு நாடுகளில் வாழும் மாணவ மாணவியருக்கு சென்னையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் வகையில் அமைந்தது. விழாவின் இடையில் கொரியாவில் இருந்து மீனா மற்றும் கயல்,குவைத்திலிருந்து செந்தில்ராஜ்,மீண்டும் கொரியாவிலிருந்து கிலோரிய மற்றும் கேவின், இந்தியாவிலிருந்து பாக்ய லீலா மற்றும் தேஜஸ்வினி பாடல்களைப் பாடி நிகழ்ச்சியை சுவையான ஆக்கினர்.
விழாவின் முக்கிய பேச்சாளரான, இந்தக் குழுவின் ஆலோசகரா ஒரிசா பாலு, சென்னை என்பது 382 வருடங்கள் பழமையானது மட்டுமல்லாமல் அது லட்சக்கணக்கான வருடங்கள் பழமையானது என்பதை எடுத்துக்கூறி தான் வாழ்ந்த காலத்தில் சென்னை எப்படி இருந்தது, இப்போது எப்படி எல்லாம் மாறி உள்ளது என்பதையும் சென்னையில்தான் முதல் மருத்துவக் கல்லூரி தடயவியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது என்பதையெல்லாம் எடுத்துக்கூறினார்.
அடுத்ததாக, நைஜீரியாவில் வசித்து வரும் நாச்சியார் என்று அழைக்கப்படும் அமுதா சென்னை ஆங்கிலேயர்களின் காலத்திற்கு முன் எப்படி இருந்தது என்பதை எடுத்துக் கூறினார். அவருடைய தந்தை பன்னீர்செல்வம் 1921 ஆம் வருடம் சென்னை எப்படி இருந்தது இப்போது எப்படி இருக்கிறது என்பதை எடுத்துக் கூறினார் அப்போது அவர் கூவம் என்று அழைக்கப்படும் அசுத்தமான ஆறு 1975 வரையிலும் நல்ல நீரோட்டமுள்ள ஆறு ஆக இருந்தது என்றும் அதிலே படகுப் போக்குவரத்து நடந்து வந்தன என்பதையும் தன்னுடைய அனுபவத்தின் மூலம் தான் கண்டதை அழகாக எடுத்துக் கூறினார்.
கொரியாவில் இருந்து சைலஜா தான் வாழ்ந்த சென்னையை பற்றி தெரிந்துகொள்ளும் ஆவலில் பெரம்பூர் பழவேற்காடு போன்ற இடங்களில் என்ன விதமான ஆய்வுகள் நடந்துள்ளன என்பதை கேட்டு தெரிந்து கொண்டார். நந்தபாலன் என்ற பள்ளி மாணவன் தன்னுடைய ஐந்தாம் வகுப்பிலிருந்து தன்னுடைய தந்தையுடன் சென்னையை சுற்றி வந்த விபரத்தையும் அவனுடைய பள்ளி மெட்ராஸ் வினாடி வினா என்ற போட்டியில் எப்போதும் முதலில் வரும் காரணத்தையும் கூறி, மெட்ராஸ் லிட்டரரி சொசைட்டி இருந்த இடத்தைப் பற்றியும் அங்கு பலரும் வராத காரணத்தால் எப்படி பராமரிக்கப்படாமல் இருக்கிறது என்பதையும் எடுத்துக் கூறினார். மேலும் மெட்ராஸ் அப்சர்வேட்டரி பக்கத்தில் உள்ள 12 அடி தூண், அதில் எழுதப்பட்ட நான்கு மொழி கருத்து பற்றியும் எடுத்துக் கூறினார்.
சென்னையை பற்றி மட்டும் பல வரலாற்றுச் செய்திகள் இந்த நிகழ்வில் கலந்துரையாடப்பட்டது. தொல் பழங்காலத்திலிருந்தே சென்னை இருக்கும் இடம் மிகவும் சிறப்பான இடமாக இருந்ததைப் பற்றி இந்த கருத்தரங்கில் கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள் அறிந்து கொண்டனர். நிகழ்ச்சியை இந்தக் குழுவின் தலைவர் டார்வின் கணவர்கள் நெறிப்படுத்தி விழா இனிதே நடைபெற உதவினார்.
- நமது ஹாங்காங் செய்தியாளர் சித்ரா சிவகுமார்
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.