சகலகலாவல்லி சஞ்ஜிதா சின்தாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சகலகலாவல்லி சஞ்ஜிதா சின்தாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்

செப்டம்பர் 01,2021 

Comments

அமெரிக்காவின் டெக்சஸ் மாநகரம் ஹூஸ்டன் பியர்லேண்டில் இருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் திருத்தலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் நாளன்று மஹாலட்சுமி சிவா மற்றும் சிவாவின் மகள் சஞ்ஜிதா சின்தாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தேறியது. விழாவிற்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் சிறப்பிக்க வந்திருந்தனர்.

அரங்கேற்ற நிகழ்வின் துவக்கம் நடராஜர் பூஜையில் ஆரம்பம் ஆனது. குரு லாவண்யா பிரபு, பெற்றோர் மற்றும் குடும்ப அங்கத்தினர்கள் சஞ்ஜிதாவிற்கு ஆசிகள் வழங்கினர். பின்னர் நடராஜர் பெருமானின் அனுக்கிரத்தாலும் குரு லாவண்யா பிரபுவின் பூரண ஆசியுடனும் தனது குருவிடம் இருந்து சலங்கையினை சஞ்ஜிதா பெற்றுக் கொண்டார்.

பெற்றோர் மஹாலட்சுமி சிவா மற்றும் சிவா இருவரும் அவையினர் அனைவரையும் வரவேற்று நடன நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்மிதா பிரசன்னாவிடம் ஒப்படைத்தனர்.

சஞ்சிதா தனது நாட்டியத்தின் முதல் பகுதியாக அமைந்த தோடய மங்களம் மற்றும் புஷ்பாஞ்சலியில் ஆரம்பித்தார். வழுவூர் திருத்தலத்தில் வீற்றிருக்கும் வீரத்தீஸ்வரர் கஜ சம்ஹாரமூர்த்தியை போற்றியும் தடைகளை அகற்றும் முழுமுதற் கடவுள் விநாயகப் பெருமானை வணங்கியும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

கவுத்துவ நடனத்தில் திருப்பாவை அருளிய கோதை ஆண்டாளின் வரலாற்றினை மிக அற்புதமாக சஞ்ஜிதா வர்ணித்தார். ஒன்பதாவது நூற்றாண்டில் வாழ்ந்த ஒரே பெண் ஆழ்வார் கோதை ஆண்டாளை கண் முன்னே கொணர்ந்தது சிறப்பு.

கவுத்துவத்தினை தொடர்ந்து பரதத்தில் சிறப்பு அம்சமாக விளங்கும் சப்தத்தில் இன்னும் சிறப்பாக இருக்கக்கூடிய மண்டூக சப்த நடனம் ஆடினார். பகவான் விஷ்ணு கஜேந்திரனை முதலையிடம் இருந்து காப்பாற்றி துருவ முனிவரின் சாபத்தில் இருந்து விடுவித்த கதையை அருமையாகப் படைத்திருந்தார் சஞ்ஜிதா. இந்த சப்தம் குச்சுப்புடி நடனத்தில் மிகவும் பிரபலமாகும் மற்றும் இது கஜேந்திர மோட்ச சப்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

அழகும் அபிநயமும் ஒன்று கூடி நாட்டியக்கலையினை தத்ரூபமாக வெளிப்படுத்துவது வர்ணம் பகுதியாகும். ஏழு மலையானை தரிசிக்க கடலலைப் போல குவிந்து வரும் பக்தர்களின் மனம் மற்றும் அவர்களின் எண்ண வெளிப்பாட்டினை மிகத்தெளிவாகவும், திருப்பதி பெருமானின் அழகில் திளைத்து அவனின் பாதம் பற்றும் அந்த நொடி வரையில் காண்பவரை அழைத்துச் சென்றார். அசுர குல அரசன் மகாபலி சக்ரவர்த்தியை, பகவான் விஷ்ணு வாமன அவதாரம் கொண்டு வதம் செய்யும் நிகழ்வினை மிக அநாசயமாக செல்வி. சஞ்சிதா வெளிப்படுத்தினார். வர்ணத்தின் நிறைவுப்பகுதியின் சிறப்பு அம்சமாக மிருதங்க தாளமும் சஞ்சிதாவின் சலங்கை ஒலியும் சேர்ந்து வர்ணம் பகுதிக்கு இன்னும் மெருகேற்றியது. தேவர் முனிவர் வர்ணம் பகுதி மட்டும் கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் இருந்தது. ஆனால் கொஞ்சம் கூட சளைக்காமல் செல்வி.சஞ்ஜிதா தனது நடனத்தால் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார்.

நிறைவு பகுதியில் தில்லை சிதம்பரம் நடராஜனின் ஆனந்தத் தாண்டவ நடனத்தை நடனம் ஆடினார் பாடலில் மிக அழகாக சஞ்ஜிதா பிரதிபலித்தார். அருட்தொண்டர் அண்ணமாச்சார்யாவின் படைப்பான 'தந்தனானா' பாடலில் இந்த பூமியில் அனைவரும் ஒன்றே என்று பறைசாற்றும் வகையில் நடனம் அமைந்தது வெகு சிறப்பாக இருந்தது. நடன நிகழ்வின் இறுதிக்கட்டமான தில்லானா பகுதியினை நிறைவு செய்து தனது பரதநாட்டிய அரங்கேற்றத்தினை இனிதே அரங்கம் ஏற்றி அவையினரின் பாராட்டுதலைப் பெற்றார்.

ஸ்மிதா பிரசன்னா நிகழ்ச்சியினை மிகவும் திறம்பட நடத்திச் சென்றார். சஞ்ஜிதா சின்தாவின் கொஞ்சும் உரையுடனும் பெற்றோரின் நன்றி நவிலலுடனும் நடன அரங்கேற்றம் இனிதே நிறைவேறியது.

பன்னிரெண்டே வயது நிரம்பியிருக்கும் சஞ்ஜிதா சின்தா தனது ஐந்தாம் வயதில் தத்வம் நடனப் பள்ளியில் 2014 ஆம் வருடம் குரு லாவண்யா பிரபுவிடம் பயில ஆரம்பித்தார். ஏழாம் வகுப்பு பயிலும் சஞ்ஜிதா தத்வம் நடனப்பள்ளியின் அரங்கேற்ற மாணவர்கள் பட்டியலில் மிகவும் இளையவர் என்பதும் பல்வேறு நடனப்போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் குவித்து தனது நடனப்பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சப்தமி அமைப்பு நடத்திய தேசிய அளவிலான நடனப்போட்டியில் தனி நடனப்பிரிவில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு பெற்றுள்ளார். நடனம் மட்டுமில்லாமல், வயலினில் மேற்கத்திய முறை மற்றும் கர்நாடக முறை இரண்டும் பயின்று வருகிறார். செல்வி. சஞ்ஜிதா தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் சரளமாக பேசக்கூடியவரும் ஆவார்.

சஞ்ஜிதா சின்தா ஆந்திரபிரதேசத்தின் குச்சுப்புடி நடனத்தில் பெயர் பெற்ற சின்தா மற்றும் பசுமர்தி வம்சா வழியில் வந்தவர். அப்பா வழி கொள்ளுத்தாத்தா சின்தா குடும்பம் மற்றும் அம்மா வழி கொள்ளுத்தாத்தா பசுமர்தி குடும்பம் என இருபுறமும் குச்சுப்புடி நடனத்தில் இந்தியாவின் தலைசிறந்த விருதுகளான சங்கீத நாடக அகாடமி மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்று பெருமை சேர்த்தவர்கள். “புலிக்குப் பிறந்தது பூனையாகுமா' என்பதற்கு ஏற்ப சஞ்ஜிதா சின்தா இன்று தனது நாட்டிய அரங்கேற்றத்தில் முதல் முத்திரை பதித்து உள்ளார்.

குரு லாவண்யா பிரபு தத்வம் நடனப்பள்ளியின் மூலம் ஹூஸ்டனில் வழுவூர் பாணி நாட்டிய கலையினை தனது மாணவர்களுக்கு வழங்கி வருகிறார். தத்வம் நடனப்பள்ளி மாணவர்கள் குரு லாவண்யா பிரபுவின் வழி நடத்தலில் பலவிதமான நடனப்போட்டிகளிலும், தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டும் பரிசுகளைப் பெற்றும் பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.

அடேயப்பா,,! எத்தனை எத்தனை திறமைகள் இச்சின்னஞ்சிறு வயதினிலே! மேலும் மேலும் அனைத்து கலைகளிலும் சிறக்க தினமலர் சார்பாக வாழ்த்துக்கள்!

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்., 18 வரை அபுதாபி மௌலிது கமிட்டி நிகழ்ச்சி

அக்., 18 வரை அபுதாபி மௌலிது கமிட்டி நிகழ்ச்சி...

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us