ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்திய இரத்ததான முகாம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்திய இரத்ததான முகாம்

செப்டம்பர் 01,2021 

Comments

ரியாத், சவூதி அரேபியா: இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ரியாத் தமிழ்ச் சங்கம், கிங் பஹத் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இரத்ததான முகாமை நடத்தியது. 20 ஆகஸ்ட் 2021, வெள்ளிக்கிழமை அன்று மருத்துவமனை இரத்தான வளாகத்தில் காலை 9:00 மணி முதல் மாலை 4 மணிவரை மிகச் சிறப்பாக நடந்த இந்த நிகழ்வை சவூதிஅரேபியா இந்தியத் துணைத்தூதர் என். ராம் பிரசாத் தொடங்கி வைத்தார், அவரை ரியாத் தமிழ்சங்க முன்னாள் தலைவர் வெற்றிவேல் சந்தனமாலை அணிவித்து வரவேற்றார்,

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் ரியாத் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் அஹமது இம்தியாஸ், துணைத்தலைவர் ஜமால் சேட், செயலாளர் சிவராமலிங்கம் மற்றும் பல செயற்குழு உறுப்பினர்கள் இந்தியத்துணைத் தூதர் முன்னிலையில் இரத்ததானம் வழங்கி ஆரம்பித்து வைத்தார்கள். ரியாத் தமிழ்ச் சங்க உறுப்பினர்களும் மற்றும் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் மாலை 4 மணிவரை தொடர்ச்சியாக வந்திருந்து இரத்ததானம் வழங்கினர்.

வந்திருந்த அனைவருக்கும் தண்ணீர், பழச்சாறு மற்றும் பிஸ்கட் வழங்கியதோடு இரத்த தானம் செய்தவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள், சிறப்பு விருந்தினரும், முன்னாள் துணைத்தலைவர் அருண்ஷர்மாவும் வழங்கினர். இந்தியத்துணைத்தூதர் இரத்ததானத்தின் மாண்பைப் பற்றி அனைவருக்கும் எடுத்துரைத்தார், அவர் வழக்கமாக இரத்ததானம் செய்வதாகவும் கடந்த ஒருமாதத்திற்கு முன்பு இந்தியத்தலைநகரில் இரத்ததானம் செய்ததால் தன்னால் இப்பொழுது தானம் செய்யமுடியவில்லை என்றும் வருத்தம் தெரிவித்து இனிவரும் நிகழ்வுகளில் தானும் பங்கு கொள்வதாகக் கூறி அனைவருக்கும் உற்சாகமூட்டினார்.

75வது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் நோக்கில் முகம்தெரியா மனிதர்களுக்காகப் பல்வேறு இந்திய அமைப்புகள் செய்யும் இரத்ததான நிகழ்வுகள் போற்றுதலுக்குறியது என்றும் பாராட்டினார். ரியாத் தமிழ்ச் சங்கம் ஆராவரமின்றி பல்வேறுதரப்பட்ட இந்திய மக்களுக்கும் அதிலும் குறிப்பாகத் தமிழர்களுக்கும் அநேகமான சேவைகள் செய்து வருவதாகவும், அதனை இந்தியத்தூதரகம் வெகுவாகப் பாராட்டுவதாகவும், இது போன்ற சமுதாய சேவைகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் அறிவுரை வழங்கிப் பாராட்டிப் பேசினார்.

அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் ராம் பிரசாத்துக்குப் பாராட்டுக் கேடயம் வழங்கி ரியாத் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்கள். ரியாத் தமிழ்ச் சங்கத்தின் நடப்பாண்டுத் தலைவர் முஹைதீன் கஸ்ஸாலி சார்பாக முன்னாள் தலைவர் சாகுல் ஹமீத் மருத்துவமனை அதிகாரிகள், மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து சான்றிதழும் வழங்க நிகழ்வு மாலை 4 மணிக்கு இனிதே நிறைவுற்றது.

- அஹமது இம்தியாஸ், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us