சிங்கப்பூர் சக்தி நுண்கலைக் கூடத்தின் ஏற்பாட்டில் பரதநாட்டிய அரங்கேற்றம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூர் சக்தி நுண்கலைக் கூடத்தின் ஏற்பாட்டில் பரதநாட்டிய அரங்கேற்றம்

செப்டம்பர் 06,2021 

Comments

 சிங்கப்பூர் சக்தி நுண்கலைக் கூடத்தின் ஏற்பாட்டில் தேவி வீரப்பனின் மாணவி கயல் பெர்னாண்டஸ்சின் 'சாற்றி வளர்த்திடுவாய்' பரதநாட்டிய அரங்கேற்றம் 29/08/2021 அன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக சிங்கப்பூர் பாராளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினரும், ஜெய் ஜீ மெல்வானி குழுவின் நிர்வாக இயக்குனருமான ஆர்.தினகரனும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக பதிவாளர் ஆர். ராஜாராமும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 'சிங்கை தமிழ்ச்செம்மல்' முனைவர். சுப திண்ணப்பன் வாழ்த்துரை வழங்கி பாராட்டி பேசினார்.

குரு வணக்கத்துடன் தொடங்கியது நிகழ்வு. பாரம்பரிய கவித்துவங்களை தொடர்ந்து வர்ணம் அரங்கேறியது. கல்யாணி ராகத்தில் அமைந்த 'சாற்றி வளர்த்திடுவாய் நம் சங்க இலக்கிய பெருமையெல்லாம் இங்கு' என்னும் கவிஞர். முடியரசன் இயற்றி கவிதை வரிகளுக்கு ‘கலைமாமணி‘ முனைவர். மா.சுப. சரளா இசை வடிவம் கொடுத்திருந்தார். தொல்காப்பியம், திருக்குறள், ஆசாரக்கோவை, குறுந்தொகை, புறநானூறு ஆகிய இலக்கிய களஞ்சியங்களில் சொல்லப்பட்டிருக்கும் அறம் சார்ந்த வாழ்க்கை விழுமியங்களை நடன அமைப்பாக உருவாக்கியிருந்தார் தேவி வீரப்பன். பார்ப்பவர்களின் மனதில் தமிழ் இலக்கியங்களில் இவ்வளவு உள்ளனவா என்று சாற்றி போற்றும்வகையில் அமைக்கப்பட்டிருந்தது வர்ணம்.

அடுத்து, நாக நிருத்தம், அதை தொடர்ந்து பாபநாசம் சிவம் மகள் நிலா ராமமூர்த்தி இயற்றிய 'ஆயிரம் ஆயிரம்' பதம், லால்குடி ஜெயராமன் இயற்றிய ரேவதி தில்லானா. தொல்காப்பியத்தின் வழிபடு தெய்வம் என்ற வாழ்த்து பாடலுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. தேவி வீரப்பன் நடன அமைப்பு மற்றும் நட்டுவாங்கம்; திருச்சிற்றம்பலம் ரமணன் மிருதங்கம்; சாய் விக்னேஸ்வரன் வாய்ப்பட்டு; பவன் சுகோஷ் வயலின்; ராகவேந்தரன் ராஜசேகரன் புல்லாங்குழல். நடனமணிக்கு 'நாட்டிய தாரகை' விருதை சிறப்பு விருந்தினர்கள் வழங்கினார்கள்.

நிகழ்வினை தமிழ்செல்வி ராஜராஜன் நெறிப்படுத்தினார். சக்தி நுண்கலைக் கூடத்தின் மற்றொரு புதிய முயற்சியாக 'பொழில்' என்னும் டிஜிட்டல் பக்கம் தொடங்கப்பட்டு அரங்கேற்ற நிகழ்ச்சி நேரடி இணைய நிகழ்வாக நடத்தப்பட்டது.

- நமது செய்தியாளர் வெ.புரு ேஷாத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

அக்., 18 வரை அபுதாபி மௌலிது கமிட்டி நிகழ்ச்சி

அக்., 18 வரை அபுதாபி மௌலிது கமிட்டி நிகழ்ச்சி...

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us