தினமலர் நாளிதழ் செழித்தோங்கி வளர சிசெல்சு ஆலயத்தில் வழிபாடு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தினமலர் நாளிதழ் செழித்தோங்கி வளர சிசெல்சு ஆலயத்தில் வழிபாடு

செப்டம்பர் 10,2021 

Comments

சிசெல்சு இந்துக் கோயில் சங்க நவசக்தி விநாயகர் ஆலயத்தில் செப்டம்பர் முதல் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விநாயக சதுர்த்தி மஹோத்ஸவம் சீரும் சிறப்புமாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் விநாயகப் பெருமான் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

ஒன்பதாம் நாள் மஹோத்ஸவத்தில் – செய்திகளை முந்தித் தரும் உண்மையின் உரைகல் தினமலர் நாளிதழ் நாளும் செழித்தோங்கி வளர்ந்து தமிழ்கூறும் நல்லுலகம் முழுவதும் சேவையாற்ற – எழுபத்தொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள இந்நாளிதழ் மென்மேலும் உயர்ந்து இன்னுமொரு நூற்றாண்டு வளரட்டும் என ஆலய மேலாண்மைக் கழகத் தலைவர் சந்திரன் நாகராஜன் பிள்ளை சங்கற்பம் மேற்கொள்ளத் தலைமை அர்ச்சகர் தண்டபாணி சிவாச்சாரியார் அர்ச்சனை செய்தார்.

ஒன்பதாம் நாள் விழாவில் விநாயகப் பெருமான் குபேர கணபதியாகக் காட்சி அளித்தது மெய் சிலிர்க்க வைத்தது. ரூபாய் நோட்டுக்களான அலங்காரத்தில் குபேர கணபதியாக விநாயகப் பெருமான் எழுந்தருள பக்தப் பெருமக்கள் வடம் பிடிக்க தெய்விக நாதஸ்வர இசையும் திருமுறைப் பாராயணமும் முழங்க திருத்தேரில் அமர்ந்து உள்வீதி வலம் வந்த போது பக்தப் பெருமக்கள் “ ஓம் ஸ்ரீ மகா கணபதையே நமஹ “ எனப் பக்திப் பெருக்கில் லயித்து சரண கோஷம் எழுப்பினர்.

திருத்தேர் பவணி வந்த பின் அனைவருக்கும் அருட் பிரசாதமும் உணவுப் பிரசாதமும் வழங்கப்பட்டது. இந்து கோயில் சங்கத் தலைவர் சந்திரன் நாகராஜன் பிள்ளை அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்திருந்தார்.

- தினமலர் வாசகர் : சி.என்.பிள்ளை

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)...

செப்., 27 ல் கல்லூரிப் பயணம்: நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் 'அறிவரங்கம்' நிகழ்ச்சி

செப்., 27 ல் கல்லூரிப் பயணம்: நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் 'அறிவரங்கம்' நிகழ்ச்சி...

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us