மகாகவி நாளின் தேதியை மாற்ற சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் வேண்டுகோள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மகாகவி நாளின் தேதியை மாற்ற சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் வேண்டுகோள்

செப்டம்பர் 11,2021 

Comments

 மகாகவி பாரதியார் இறந்தது செப்டம்பர் 12ஆம் நாள் என்பதால் ஆண்டுதோறும் செப்டம்பர் 12ஆம் தேதி மகாகவி நாளைக் கொண்டாட வேண்டும் என்று தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலினுக்கு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அவருக்கு எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன் எழுதியுள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார்.

பாரதியார் இறந்த நாள் 12.09.1921 என்பதுதான் சரி என்றும் 11.09.1921 என்பது தவறு என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அதற்குச் சான்றாக சென்னை மாநகராட்சி வழங்கிய பாரதியாரின் இறப்புச் சான்றிதழும் எட்டையபுரத்தில் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசுஅறிவித்த அவர் வாழ்ந்த வீட்டில் பதிக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையும் இருக்கின்றன என்றார் அவர்.

ஆனால் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆண்டுதோறும் பாரதியார் மறைந்த செப்டம்பர் 11 மகாகவி நாளாகக் கடைப்பிடிக்கப்டும் என்று அறிவித்திருப்பது தவறு என்றும் இறையன்பு போன்ற தமிழ் அறிஞர் தலைமைச் செயலாளராக இருக்கும் நிலையில் இந்தத் தவறு எவ்வாறு நேர்ந்தது என்பது தெரியவில்லை என்றும் ஆண்டியப்பன் குறிப்பிட்டுள்ளார்.

பாரதியாரின் இறப்புச் சான்றிதழ், எட்டையபுரத்தில் பாரதியார் நினைவு இல்லத்தில் பதிக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகை ஆகியவற்றின் நிழற்பட நகல்களையும் முதல்வருக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மகாகவி நாளின் தேதியை மாற்றும்படி தமிழக முதல்வக்குத் தாம் எழுதியுள்ளகடிதத்தின் நகல் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோருக்கும் அனுப்பியுள்யதாக தெரிவித்த அவர் அவர்களின் முடிவுக்குக் காத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

- நமது செய்தியாளர் வெ.புரு ேஷாத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)...

செப்., 27 ல் கல்லூரிப் பயணம்: நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் 'அறிவரங்கம்' நிகழ்ச்சி

செப்., 27 ல் கல்லூரிப் பயணம்: நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் 'அறிவரங்கம்' நிகழ்ச்சி...

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us