சிசெல்சு ஆலய விடையாற்றி உற்சவம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிசெல்சு ஆலய விடையாற்றி உற்சவம்

செப்டம்பர் 12,2021 

Comments

சிசெல்சு இந்துக் கோவில் சங்க ஸ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற பத்து நாள் ஸ்ரீ விநாயக சதுர்த்தி மஹோத்ஸவம் செப்டம்பர் பத்தாம் தேதி பிரசிவிரான்ஸ் கடற்கரையில் கோலாகலமாக நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவத்துடன் நிறைவு பெற்றது.

பதினொன்றாம் தேதி அஸ்த்ர ஹோமம், சர்வ பிராயச்சித்தாபிஷேகம், உத்ஸவ மூர்த்திகள் யதாஸ்தான பிரவேசம், மகா தீபாராதனையுடன் நிறைவு பெற்று அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. பத்து நாட்கள் அயராது சேவை செய்து ஆலயத்தைத் தெய்விக சூழலாக்கிய அர்ச்சகர்கள், ஆதரவு நல்கிய பெருமக்கள், ஒத்துழைப்பு நல்கிய இந்து கோவில் சங்க நிர்வாகிகள், இசை வித்துவான்கள், திருமுறைப் பாராயணத்தில் பங்கேற்றோர், ஆலய இதரப் பணியாளர்கள் முதலியோருக்கு இந்து சங்கத் தலைவர் சந்திரன் நாகராஜன் பிள்ளை தமது நெஞ்சுநிறை நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

நாள்தோறும் படங்களுடன் செய்தி வெளியிட்டு உலகளாவிய நிலையில் கொண்டு சென்ற தினமலர் நாளிதழுக்குக் கடிதம் மூலம் தமது நன்றியைத் தலைவர் தெரிவித்து மகிழ்ந்தார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கவுரவித்த இந்திய ஹைகமிஷனர் ஜெனரல் தல்பீர் சிங் சுகாக்கிற்குப் பொன்னாடை போர்த்திச் சிறப்பித்தார்.

முத்தாய்ப்பாக நாள்தோறும் கலந்து கொண்ட பக்தப் பெருமக்களுக்கும் நன்றி பாராட்டப்பட்டது. அனைத்து நிகழ்வுகளையும் விக்னமின்றி நடத்தி வைத்த முழுமுதற் கடவுளாம் கணபதிக்கு அனைவரும் தங்களைச் சமர்ப்பித்து விழாவை நிறைவுபடுத்தினர்.

- தினமலர் வாசகர் : சி.என்.பிள்ளை

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)...

செப்., 27 ல் கல்லூரிப் பயணம்: நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் 'அறிவரங்கம்' நிகழ்ச்சி

செப்., 27 ல் கல்லூரிப் பயணம்: நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் 'அறிவரங்கம்' நிகழ்ச்சி...

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us