இயற்கை விவசாயத்தில் விருதுபெற்ற மலேசியாவாழ் இந்திய வம்சாவளி இளைஞர் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

இயற்கை விவசாயத்தில் விருதுபெற்ற மலேசியாவாழ் இந்திய வம்சாவளி இளைஞர்

செப்டம்பர் 15,2021 

Comments

இயற்கை விவசாயத்தில் அன்னாசி பழ சாகுபடியில் ஈடுபட்டு பல்வேறு விருதுகள் பெற்றுவரும் மலேசியாவை சார்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் நவநீத்பிள்ளைக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.

மலேசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் நவநீத்பிள்ளை, துவக்கத்தில் கணினித்துறையில் வல்லுனரான இவர் தற்போது வணிகம் மேலாண்மை சார்ந்த பட்ட மேற்படிப்பு படித்திருந்தாலும், தலைநகர் கோலாலம்பூரில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி, அரசு பதிப்பகத்தார் பணியாற்றி , பெரிய வணிகர்களுக்கு ஸ்டேட்டஜிஸ்ட்ஆக பணிபுரிந்து அனுபவம் பெற்று, மேலும் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வந்தாலும் இயற்கையை நேசித்து ஆர்வம் கொண்டு விவசாயத்தில் ஈடுபட முடிவுசெய்தார்.

மக்கள் அனைவரும் விரும்பி உண்ணும் ஆரோக்கியமான உணவு வகைகளான காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தியில் நாட்டம் கொண்டு, நடுத்தர குடும்பங்கள் முதல் மேல்தட்டு குடும்பங்கள் வரை விரும்பி வாங்கும் அன்னாசி பழங்கள் நடவுசெய்து வருகிறார். குறைந்த விலையில் துவங்கி அதிக விலை என ஏராளமான ரகங்கள் அன்னாசி பழத்தில் உள்ளது அத்துடன் மிகவும் ஆரோக்கியமானது. இவையனைத்தும் இயற்கையான முறையில் விவசாயம் செய்யவேண்டும் எனும் நோக்கத்தில் மிகச் சிறப்பாக செய்து வருகிறார்.

குறுகிய சில ஆண்டு காலத்தில் பல மணி நேர தொடர் கடுமையான விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வெற்றிபெற்றுள்ளார். அன்னாசி (Mஈ2 ரகம்) பழ விவசாயத்தில் துவங்கி தொடர்ந்து வெற்றி கண்டு விவசாயத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தென்னை, மக்காச்சோளம் மற்றும் மிளகாய் விவசாயம் செய்து வருகிறார். இவையனைத்தும் Nக அண்டிச் என்ற நிறுவனத்தை துவங்கி அன்னாசி பழத்தை மதிப்பு கூட்டுப்பொருள்களாக மாற்றி அன்னாசி பழச்சாறு உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார். தென்னை விவசாயத்தில் தேங்காய் பால் உற்பத்தி செய்வதில், தென்னை சார்ந்த பொருட்கள் தயாரிப்பதிலும் ஆர்வம் கொண்டு அதில் ஈடுபட்டு வெற்றி கண்டு வருகிறார். பழங்கள் மற்றும் விவசாய பொருட்களை மலேசியாவில் உள்ள வெளிமாநிலங்கள் விற்பனை செய்து வருகிறார். பல்வேறு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்து வருகிறார்.

இந்திய வம்சாவளி இளைஞர் நவநீத்பிள்ளைக்கு மலேசிய மத்திய மற்றும் மாநில அரசு விருதுகள் 7 வழங்கி கௌரவித்துள்ளது. ஏசி அறையில் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து கொண்டு வேலை செய்யும் போது கிடைக்காத நிறைவு தனக்கு பிடித்த விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருவதால் மனநிறைவு கிடைப்பதாகவும் வாழ்க்கை முறை 360 டிகிரி தலைகீழாக மாறியுள்ளதாகவும் தெரிவித்த இளைஞர் நவநீத்பிள்ளை, படித்த இளைஞர்கள் அனைவரும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தற்போதைய இளைய தலைமுறையினர் இடையே விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகள் நாட்டம் குறைந்து காணப்படும் இக்காலத்தில், விவசாயம் செய்வதில் ஆர்வம் கொண்டுள்ளதால் தொடக்கம் முதல் தொடர்ந்து இத்தனை ஆண்டுகள் சிறப்பாக செய்து வருகிறார். விவசாயத்தில் கொண்டுள்ள ஆர்வத்திற்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உறுதுணையாக உள்ளனர்.

நவநீத்பிள்ளை தொடர்புகொள்ள தொலைபேசி எண்: 0172097173

Email: : strategist.np@gmail.com

- நமது செய்தியாளர் வெங்கடேசன்


Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்., 27 ல் கல்லூரிப் பயணம்: நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் 'அறிவரங்கம்' நிகழ்ச்சி

செப்., 27 ல் கல்லூரிப் பயணம்: நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் 'அறிவரங்கம்' நிகழ்ச்சி...

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us