'வாழ்வியல்இலக்கியப்பொழில்' அமைப்பின் 47-ஆவது மாதாந்திர நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

'வாழ்வியல்இலக்கியப்பொழில்' அமைப்பின் 47-ஆவது மாதாந்திர நிகழ்ச்சி

செப்டம்பர் 15,2021 

Comments

'வாழ்வியல்இலக்கியப்பொழில்' அமைப்பின் 47-ஆவது மாதாந்திர நிகழ்ச்சி 11-09-2021 (சனிக்கிழமை) அன்றுமாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. ‘வாழ்கநிரந்தரம்’ என்ற தமிழ் வணக்கப்பாடலோடு வரவேற்புதமிழன்னைக்கு. ‘தோடுடைய செவியன்’ என்ற தேவாரப் பாடலோடு நிகழ்ச்சியை சிறப்பாக தொடங்கி வைத்தார் ஜீவஜோதிகா.

அவரைத்தொடர்ந்து, ரமேஷ் மகாகவி பாரதியாரின் சிறப்புகளை நினைவு கூர்ந்து, மாலைப் பொழுதில் இலக்கியப் பொழிலில் இளைப்பாற இணையம்வழி இணைந்தோர் யாவரையும் வரவேற்று மகிழ்ந்தார் . தொடர்ந்து வாழ்வியல் இலக்கியப்பொழிலின் 'பொழில்' வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட்டது.

சிறுவர்கள் பங்கேற்கும் அங்கத்தில், முதலில் ஜீவஜோதிகா சிலப்பதிகார பாடல்கள் சிலவற்றை சிறப்பாக பாடினார். தொடர்ந்து, 'எண்ணிய முடிதல் வேண்டும் என்ற மகாகவி பாரதியார் பாடலை சிறப்பாக பாடினார். 

சிறுவர் அங்கத்தினைத் தொடர்ந்து, வாழ்வியல் இலக்கிய பொழில் அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி “கைவிரல் ” என்ற தலைப்பில் அருமையான ஒரு அறிமுகவுரை வழங்கினார். சங்க இலக்கியங்களில் 'கைவிரல் “என்கிற வார்த்தையின் பயன்பாடு பற்றியும் , குறுந்தொகை பாடல்கள் சிலவற்றை பாடியும் , தெளிவாக விளக்கி பேசினார். மேலும் ஐந்து விரல்களை ஐந்து பள்ளிப்பாடங்களோடு ஒப்பிட்டும் சிறப்பாக பேசினார்.

அதன்பிறகு, பெரியவர்கள் அங்கத்தில், முனைவர்தேன்மொழியாள் 'தமிழும்தவமும்' என்கிற தலைப்பில் அருமையான சிற்றுரை வழங்கினார். தொடர்ந்து, பேராசிரியர் முனைவர் மு.ஜோதிலட்சுமி 'கலகமானிடபூச்சிகள் ' என்கிற தலைப்பில் அருமையான சிறப்புரையாற்றினார்.மேலும் மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறு பற்றி பல அரிய தகவல்களை தொகுத்து தெளிவாக எடுத்து கூறினார்.

அடுத்துபுதுக்கனவுஅங்கத்தில் 'அறிவியல்தமிழ்வினாவிடை' போட்டிக்கான காணொளி வெளியிடப்பட்டது. மேலும் காணொளி சார்ந்த கேள்விகள் வெளியிடப்பட்டு, குறைந்தபட்சம் 50% சரியான விடையளித்தவர்களுக்கு மின்-சான்றிதழ் வழங்கப்பட்டது.

அடுத்து, கருத்துகேட்பு அங்கத்தில், முனைவர் அன்னபூரணி வாழ்வியல் இலக்கியப் பொழில்-047 நிகழ்ச்சியின் சிறப்பு மற்றும் பேச்சாளர்களின் உரைபற்றி தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார் ரமேஷ். நிகழ்ச்சியின் காணொளியை முகநூல் வழியாக நேரலையாகவும் ஒளிபரப்பி வந்தார் ஆசிரியை மஹ்ஜபீன் மற்றும் ரமேஷ் . 

மேலும்இந்நிகழ்வு ,பொழில் பண்பலையில் நேரலையாக ஒளிபரப்பட்டது, பல்வேறு நாடுகளை சேர்ந்த தமிழ் சான்றோர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கேட்டு மகிழ்ந்தனர்.இல்லத்தில் இருந்தபடி நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே, ரமேஷ் அழகுற நிகழ்ச்சியை நெறிப்படுத்த, சிறப்பான நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. 

முகநூலில்கண்டுகளிக்க:

https://www.facebook.com/vazhviyalilakkiyapozhil.sg/videos/1337872593277228

அமைப்பின்இணையப்பக்கம்: www.ilakkiyapozhil.com

- நமது செய்தியாளர் வெ. புரு ேஷாத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)...

செப்., 27 ல் கல்லூரிப் பயணம்: நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் 'அறிவரங்கம்' நிகழ்ச்சி

செப்., 27 ல் கல்லூரிப் பயணம்: நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் 'அறிவரங்கம்' நிகழ்ச்சி...

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us