பாரதியார்நினைவுநாள்நூற்றாண்டு- சிறப்புக்கதைக்களம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பாரதியார்நினைவுநாள்நூற்றாண்டு- சிறப்புக்கதைக்களம்

செப்டம்பர் 18,2021 

Comments

மகாகவி பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் விதமாக, சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து சிறப்புக் கதைக்களத்தை செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இணையம் வாயிலாக வெகு சிறப்பாக நடத்தியது.

முனைவர் இரத்தினவேங்கடேசன் பாரதியால் தமிழும் தமிழால் பாரதியும் அடைந்த உயர்வுகளையும், மகாகவியின் வாழ்க்கையில் நடந்த பல சுவையான நிகழ்வுகளையும் கதைக்கள எழுத்தாளர்களுடனும் பார்வையாளர்களுடனும் பகிர்ந்து கொண்டு நிகழ்ச்சியை செவ்வனே வழி நடத்தினார்.

அகமது இப்ராஹிம் தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பில் பயிலும் மாணவர் சித்தார்த் கணேஷ், குளத்து மீன்கள், ஓநாயும் வீட்டு நாயும் என்ற கதைகளைப் பகிர்ந்துகொண்டதுடன் அவற்றைத் திருக்குறளோடு ஒப்பிட்டும், அதிலுள்ள புதிய சொற்களைப் பற்றியும் மிக அழகாகப் பேசினார்.

சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளியில்உயர்நிலை இரண்டில் பயிலும் மாணவி ஶ்ரீநிதி சேகர், இருளும் ஒளியும், மலைப்பாம்பும் குரங்குகளும் என்ற கதைகளைப் பற்றி கூறியதோடு, கல்வியே நம்மை அறியாமையிலிருந்து காக்கும் என்றும், குழுஉணர்வின் முக்கியத்துவத்தையும் கதைகள் வலியுறுத்துவதாக மிக இயல்பான நடையில் எடுத்துரைத்தார். மாணவர்கள் இருவருமே தங்கள் கதைகளை இக்கால கொரோனா சூழ்நிலையோடு ஒப்பிட்டுப் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

கவிஞர் இரா. சத்திக்கண்ணன் வண்ணான் (சலவைத் தொழிலாளி) தொழில், அர்ஜூன சந்தேகம், வேப்ப மரம் போன்ற கதைகளைப் பற்றி சுவையாகக் கலந்துரையாடினார். அதில் முக்கியமாக ஐம்புலன்களை அடக்கி, நல்வழிப்படுத்துவதால் அச்சத்தை தவிர்க்கலாம் என்றும் பாரதியார் போலவே சிங்கையின் தந்தை லீ குவான் இயூ அச்சமின்றி வாழ்ந்தவர் என்றும் குறிப்பிட்டார். இயற்கை விரும்பியான பாரதியார் தமிழைப் படித்தால் ஞானம் உண்டாகும் எனக் கூறியதையும் நினைவு கூர்ந்தார்.

இலக்கியவாணி முனைவர். சரோஜினி செல்லக்கிருஷ்ணன் கடல், கலியுக கடோற்கசன், வேணு முதலி போன்ற கதைகளை மிக அருமையாகப் பகிர்ந்ததோடு அந்தக் கதைகளில் கையாண்ட கனவுக்குள் கனவு மற்றும் படிமம் போன்ற உத்திகளைப் பற்றி தெளிவாக விளக்கமளித்தார். அன்புதான் மற்றவர்களைக் கட்டிப்போடும் ஆயுதம் என்பதை கதையின் மூலம் அடிக்கோடிட்டுக் கூறியது மிகவும் சிறப்பு.

இவ்விழாவில் தலைமையுரை ஆற்றிய சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் நா.ஆண்டியப்பன், பாரதியின் கதைகள் சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களை வலியுறுத்துவதாகவும் அதனால் அவருடைய நினைவு நாளின் நூற்றாண்டு நிகழ்வில் பாரதியின் கதைகளைப் பற்றி பேச முடிவெடுத்ததாகவும் கூறி, எதிர்வரும் நிகழ்ச்சிகளைப் பற்றியும் அறிவித்தார்.

வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி கம்பன் விழாவும், டிசம்பர் மாதம் கண்ணதாசன் விழாவை ஒட்டி பாட்டுப்போட்டியும், மேலும் ஏற்கனவே அறிவித்தப்படி எழுத்தாளர் கழகத்தின் மறைந்த தலைவர் சுப.அருணாசலம் நினைவாக சூழலுக்கேற்ப பாட்டு எழுதும் போட்டியும் நடைபெறும் என்றும் அதற்கான அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து, ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி முதல் தேதி பாரதியின் கதைகளை மேலும் பிரபலப்படுத்தச் சிறப்பு இலக்கியப் பட்டிமன்றம் அரங்கேறும் எனவும் கூறி உரையை நிறைவு செய்தார்.

முன்னதாக பிரேமா மகாலிங்கம் பாரதியாரின் பாடலோடு நிகழ்ச்சியை இனிதே தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஆதரவு நல்கிய தேசிய நூலக வாரியத்தின் தமிழ்ப் பிரிவுத் தலைவர் அழகிய பாண்டியனுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டு அனைவரையும் வரவேற்றார். மேலும் மணிமாலா மதியழகன், முனைவர். இரத்தின வேங்கடேசனை அறிமுகப்படுத்தி உவகையுடன் வரவேற்றார்.

இதில் முதல் அங்கமாக மழலைச் செல்வங்களின் ‘ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா’ என்ற குயிலிசை அரங்கேறியது. இதற்குக் காணொளி வடிவம் கொடுத்த Time4All குழுவினருக்கும் நன்றி நல்கப்பட்டது. நிறைவாக கேள்வி பதில் அங்கமும், அதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதக் கதைக்கள வெற்றியாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டன.

மாணவர் பிரிவு:

முதல் பரிசு – ‘என்னுள் பாரதியார்’ - நெல்லையப்பன் அட்சயபூரணி, தெமாசெக் தொடக்கக்கல்லூரி

இரண்டாவது பரிசு - ‘மனம்’ - சித்வியா சிதம்பரம், தெமாசெக் தொடக்கக்கல்லூரி

மூன்றாம் பரிசு – ‘சவாலே சமாளி’ - சுதர்சன் பாலாஜி, ராபிள்ஸ் கல்விக்கழகம்

இளையர் பிரிவு பரிசு

- ‘தவறுகள் குற்றங்களல்ல’ - சரண்யா முசிலா, ஆன்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரி

நூலறிமுகம்:

மலையரசி மற்றும் அசோக்குமார் - நூல்: அமைதி பிறந்தது, நூலாசிரியர்: இராம கண்ணபிரான்;

பிரதீபா - நூல்: ஒரு கோடி டாலர் - நூலாசிரியர்: மாதங்கி;

சியாம்குமார் - நூல்: ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - நூலாசிரியர்: ஜெயகாந்தன்

பொதுப்பிரிவு சிறுகதை:

முதல் பரிசு - ஷோபா குமரேசன் – ‘துளசி’

இரண்டாவது பரிசு - விமலாரெட்டி – ‘மனதில் உறுதி வேண்டும்’

மூன்றாம் பரிசு இருவருக்கு - திருவாட்டி சபரிஸ்ரீ – ‘வைகறை ராகங்கள்’, திரு உமாசங்கர் - ‘வயதான அப்பாவும் வசீகரிக்கும் நாயும்’

- நமது செய்தியாளர் வெ.புரு ேஷாத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

அக்., 18 வரை அபுதாபி மௌலிது கமிட்டி நிகழ்ச்சி

அக்., 18 வரை அபுதாபி மௌலிது கமிட்டி நிகழ்ச்சி...

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us