சிசெல்சு ஆலயத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்சவம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிசெல்சு ஆலயத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்சவம்

செப்டம்பர் 21,2021 

Comments

 சிசெல்சு நவசக்தி விநாயகர் ஆலயத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மூலவருக்கு விசேஷ அபிஷேகம் – கலசாபிஷேகம் நடைபெற்று வடை மாலை சாற்றி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் விசேஷ ஹோமங்கள் நடைபெறும் 

முதல் சனிக்கிழமையான செப்டம்பர் பதினெட்டாம் தேதி ஹயக்ரீவர் ஹோமம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இரண்டாவது வார சனிக்கிழமையன்று ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஹோமம் – மூன்றாவது வாரத்தில் தன்வந்திரி ஹோமம் – நான்காவது வாரத்தில் சுதர்ஸன ஹோமமும் கடைசி ஐந்தாவது வார சனிக்கிழமையன்று அஷ்டாக்ஷ்ரி ஹோமமும் நடைபெறவுள்ளன. 

முதல் வாரத்தில் பக்தர்கள் செலுத்திய வடை மாலை அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தமை கண்கவர் காட்சியாக அமைந்தது. இருபதாம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜைகள் நிறைவு பெற்று பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்கப்பட்டது. 

ஆலய மேலாண்மைக் குழுத் தலைவர் சந்திரன் நாகராஜன் பிள்ளை அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்திருந்தார்.

- தினமலர் வாசகர் சி.என்.பிள்ளை

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

அக்., 18 வரை அபுதாபி மௌலிது கமிட்டி நிகழ்ச்சி

அக்., 18 வரை அபுதாபி மௌலிது கமிட்டி நிகழ்ச்சி...

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us