சிசெல்ஸ் ஆலயத்தில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை வழிபாடு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிசெல்ஸ் ஆலயத்தில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை வழிபாடு

செப்டம்பர் 26,2021 

Comments

சிசெல்ஸ் இந்து கோயில் ஸ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ மகா விஷ்ணு – பெருமாள் சன்னதியில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இன்றைய சூழல் கருதி பக்தப் பெருமக்கள் சில கட்டுப்பாடுகளுடனேயே அனுமதிக்கப்பட்டனர். ஆனால் எவ்வித சிரமமும் இன்றி பக்தப் பெருமக்கள் தரிசனத்திற்கும் அருட்பிரசாதம் பெறவும் விரிவான ஏற்பாடுகளை மேலாண்மைக் குழுவினர் செய்திருந்தனர். காலை ஒன்பது மணி முதல் பதினொன்று நாற்பது வரையிலும் பின்னர் மாலையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த வாரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஹோமம் – மூல மந்திர ஹோமங்கள் நிறைவு பெற்று கலசாபிஷேகம் செய்யப்பட்டது. ஸ்ரீ பெருமாளுக்குப் பக்தர்கள் நேர்த்திக் கடன் சமர்ப்பித்த குடம் குடமான பால்குட அபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாகும். பெருமாளுக்கு வடை மாலை சூட்டி பக்தர்கள் மகிழ்ந்தனர். வடைமாலையே கம்பீரமாக முடி சூட்டிக் கொண்டது போலிருந்தது.

தலைமை அர்ச்சகர் தண்டபாணி சிவாச்சாரியார் ஸ்ரீகாந்த் சிவாச்சாரியார் துணை கொண்டு ஹோமத்தைச் சிறப்புறச் செய்தார். வெண்தாமரை – செந்தாமரை மலர்களால் ஆன மாலை ஸ்ரீ பெருமாளுக்கு அழகைக் கூட்டியது. ஐயப்பன் நாதஸ்வர இசையும் பிரபாகரன் தவில் இசையும் வாசிக்க மகா தீபாராதனையின் போது பக்தர்கள் “ கோவிந்தா – நாராயணா – வைகுந்த வாசகா என முழங்கியது மெய் சிலிர்க்க வைத்தது.

மடப்பள்ளிப் பொறுப்பாளர் ராமன் தயாரித்த தெய்விக இறையமுதுப் பிரசாதம் ஸ்ரீ பெருமாளுக்குச் சாற்றப்பட்டு சர்க்கரைப் பொங்கல் – புளி சாதம் – அபிஷேகப் பிரசாதம் முதலியவை பொட்டலங்களாக இன்றைய சூழல் கருதி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஆலய மேலாண்மைக் குழுத் தலைவர் சந்திரன் நாகராஜன் பிள்ளை ஏற்பாடுகளைச் சிறப்புறச் செய்திருந்தார்.

- தினமலர் வாசகர் சி.என்.பிள்ளை

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us