ரியாத் மாநகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய இரத்ததான முகாம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ரியாத் மாநகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய இரத்ததான முகாம்

செப்டம்பர் 27,2021 

Comments

சவூதி அரேபியா: சவூதி அரேபியாவின் தேசிய தினத்தை (23, செப்டம்பர்) முன்னிட்டு கடந்த 17-09-2021 மற்றும் 24-09-2021 வெள்ளிக்கிழமைகளில் ரியாத் மாநகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நியூ செனையா கிளை - சுலைமானியா கிளை மற்றும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி இணைந்து நடத்திய 117-வது மற்றும் 118 -வது இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த அரசின் தேசிய தினத்தை முன்னிட்டு சவூதி குடிமக்களும், பல நாட்டு மக்களும் பல்வேறு விதங்களாக மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். அதில் தமிழ் பேசும் மக்களாகிய நாம், (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்) செய்த கொண்டாட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக இருந்தது. ஏனென்றால் கேளிக்கைகள் நிறைந்த கொண்டாட்டங்களுக்கு மத்தியில், இந்த உயிர் காக்கும் பணியை கொண்டாட்டமாக கொண்டாடியது தான்.

அதனடிப்படையில் இந்த முகாம்களில் 115 குருதிக் கொடையாளர்கள் பதிவு செய்து 93 நபர்கள் இரத்ததானம் செய்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல இரத்ததான ஒருங்கிணைப்பாளர் அஹமது முக்தார் இந்த இரத்ததான முகாம்கள் நடத்துவதின் நோக்கத்தை கூறும்போது, “இஸ்லாம் என்றாலே பிறர் நலம் நாடுதல்” என்ற உயரிய நோக்கத்தை திருக்குர்ஆன் வசனம் கூறும்“யார் ஒரு மனிதரை வாழ வைக்கிறாரோ, அவர் உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார்” (அல்குர்ஆன் 5:32) குறிப்பிட்டுக் காட்டி, கொண்டாட்ட நாள்களில் இப்படியும் கொண்டாட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்பதையும் உலக மக்கள் மத்தியில் இந்த முகாம் சிறப்பாக சென்றடைந்துள்ளது. இதற்கான வெகுமதியை ஏக இறைவனிடத்தில் மட்டுமே எதிர்பார்த்தவர்களாக இருக்கிறோம் என்று கூறினார்.

மேலும்‌, இம்முகாம் குறித்து பேசிய ரியாத் மண்டலத் தலைவர் செய்யது இப்ராஹீம் “கடந்த இரண்டு வருட காலமாக அசாதாரண சூழ்நிலைகளும், நெருக்கடிகளும் தொடர்ந்து இருந்தாலும், பிறர் நலன் பேணக் கூடிய, பிறர் உயிரைக் காக்கக் கூடிய இந்த மகத்தான மனிதநேய உதவியை நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் குருதிக் கொடையளிப்பவர்கள் அனைவரும் சந்தோசத்துடனும், தன்னார்வத்துடனும் அதிக அளவில் கலந்து கொண்டு இம்முகாமை சிறப்பித்திருந்தனர்.

மேலும் செய்யது இப்ராஹீம் பேசுகையில், இதுபோன்ற நற்பணிகள் இந்திய தேசத்தின் சகோதரத்துவத்தையும், அன்பையும் போற்றும் விதத்தில் அமைந்தது. மேலும் நம் இந்திய தேசத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலித்து இந்தியர்களின் தியாகங்ககளையும், தேசப்பற்றையும், உதவும் மனப்பான்மையையும் பிறநாடுகளில் பறைசாற்றும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இரத்ததான முகாம் மனிதநேயத்தை வார்த்தைகளால் மட்டுமல்லாமல் தங்களின் குருதித் தியாகத்தாலும் வெளிப்படுத்தியிருந்தது மிகவும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இந்த முகாமில் அனைத்து ஏற்பாடுகளையும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலத்தின் நியூ செனையா கிளை மற்றும் சுலைமானியா கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் மருத்துவமனைகளின் இயக்குனர் நன்றி தெரிவித்தார்.

நாங்கள் செய்கின்ற சமூக மற்றும் மனிதநேயப் பணிகளைப் பாராட்டி, அதற்குரிய அங்கீகாரமாக சவுதி அரசாங்கத்தின் சுகாதாரத்துறை சார்பாகவும், மருத்துவமனை சார்பாகவும் விருதுகளையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளோம் என்று தெரிவித்தார்.

- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மருத்துவ அணி, ரியாத் மண்டலம்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

அக்., 18 வரை அபுதாபி மௌலிது கமிட்டி நிகழ்ச்சி

அக்., 18 வரை அபுதாபி மௌலிது கமிட்டி நிகழ்ச்சி...

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us