அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா

அக்டோபர் 02,2021 

Comments

ட்ராக்ஸ் (TRAACS) மற்றும் அலோகாஸ் ஆர்ட்ஸ் அகாடமி (ALOKAS ARTS ACADEMY) பெருமையுடன் இணைந்து வழங்கும் மெய்நிகர் (VIRTUAL) TRAACS INTERNATIONAL CARNIVAL அக்டோபர் 19 தொடங்கி நவம்பர் 19 வரை நடைபெறவுள்ளது.

இப்பெருவிழாவில் அனைத்துலக யோகா போட்டி, அனைத்துலக பரதம் மற்றும் கிராமிய நடனப் போட்டி, அனைத்துலக பாடல்(சங்கீதம்) மற்றும் இசைக் கருவிக்கானப் போட்டி, அனைத்துலக தேவாரம் பண்ணிசைப் போட்டி, அனைத்துலக திருக்குறள் பாராயணப் போட்டி, அனைத்துலக கதைக் கூறுதல்(ஆங்கிலம்)/ தன்னுரை (MONOLOGUE) போட்டி, அனைத்துலக பேச்சுப் போட்டி(ஆங்கிலம்) மற்றும் அனைத்துலக சதுரங்கப் போட்டி என பல்லின மக்களும், மாணவர்களும் பயனுறும் வகையில் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.

மலேசிய கல்வியமைச்சின் அங்கீகாரத்துடன் நடைபெறவுள்ள இப்போட்டிகள் மலேசியர்களுக்கு இலவசம். மேலும் போட்டியாளர்களுக்கு இலவச பயிற்சிப் பட்டறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் நன்கொடை வழங்கலாம். இப்போட்டிகளில் கலந்து சிறப்பிக்க மாணவர்களை அன்புடன் அழைக்கிறார்கள் TRAACS மற்றும் ALOKAS குழுமத்தினர்.

மேல் விபரங்களுக்கு WWW.ALOKAS.COM எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணப்படும் I-BOARD--ஐ க்ளிக் செய்யவும். தொடர்புக்கு 01111647092 அல்லது 0125050980 எனும் எண்களை அணுகவும்.

- நமது செய்தியாளர் வெங்கடேசன்

Advertisement

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பாலஸ்தீனத்தில் தூய்மைப் பணி முகாம்

பாலஸ்தீனத்தில் தூய்மைப் பணி முகாம்...

பிரான்ஸில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம்

பிரான்ஸில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம்...

2022 ஜன., 13 வரை அட்லாண்டா இந்து கோயிலில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா லட்சார்ச்சனை

2022 ஜன., 13 வரை அட்லாண்டா இந்து கோயிலில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா லட்சார்ச்சனை...

துபாய் எக்ஸ்போ 2020 இந்திய அரங்கில் தஞ்சை கோயில்

துபாய் எக்ஸ்போ 2020 இந்திய அரங்கில் தஞ்சை கோயில்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us