ஜெர்மனியில் புரட்டாசி தசல் (தளிகை) பூஜை | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

ஜெர்மனியில் புரட்டாசி தசல் (தளிகை) பூஜை

அக்டோபர் 09,2021 

Comments

ஐரோப்பாவில் வாழும் சௌராஷ்ட்ரா மக்கள் ஒன்று சேர்ந்து புரட்டாசி தசல் (தளிகை) பூஜையை ஹாம் நகரில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் மிக விமரிசையாக கொண்டாடினர். ஐம்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இணைந்து வெங்கடேச பெருமாளுக்கு பூஜை செய்து பக்தி பரவசத்துடன் 'கோவிந்தா கோவிந்தா' என்று கோஷமிட்டு உலக நன்மைக்காகவும் வேண்டிக்கொண்டனர்.

தமிழ்நாட்டில் வாழும் சௌராஷ்ட்ரா குடும்பங்களில் சிலர் புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை அன்று வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அன்றைய நாள் காலை விரதமிருந்து பிக்ஷை பாத்திரம் ஏந்தி அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று அரிசியை பிக்ஷையாக பெறுவர். பிக்ஷை பெற்ற அரிசியை வீட்டில் சமைத்து வெங்கடேச பெருமாளுக்கு படைப்பர். நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் என அனைவரையும் அழைத்து சமைத்த உணவை பணிவுடன் பரிமாறுவர்.

பிக்ஷை பெறுவதின் மூலம் தான் என்ற கர்வம் அகல்வதாகவும், அனைவருக்கும் பரிமாறுவதின் மூலம் பகிர்ந்து கொள்ளுதலையும், அனைவரையும் சமமாக பாவிக்கும் எண்ணத்தையும் தசல் வலியுறுத்துவதாக நம்புகின்றனர்.

சௌராஷ்ட்ரா மக்கள் மதுரையை பிரதானமாக கொண்டிருந்தாலும் சென்னை, சேலம், பரமக்குடி, கும்பகோணம், திருச்சி, பெங்களூர் என பல்வேறு நகரங்களில் வாழ்ந்து வருகின்றனர். தொழில், படிப்பு நிமித்தமாக பல நாடுகளில் பரவியிருக்கும் இவர்கள், இன்னமும் தசல் வழக்கத்தை கடை பிடித்து வருகின்றனர். ஜெர்மனி, பெல்ஜியம், செக் ரிபப்லிக், நெதர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து பதினைந்து சௌராஷ்ட்ரா குடும்பங்கள் ஒன்றிணைந்து இந்த ஆண்டு தசல் பூஜையை முன்னெடுத்து நடத்தியுள்ளனர்.

ஏறக்குறைய 140 பேர் கலந்து கொண்ட இந்த தசலில் கிருஷ்ணர் பாத அபிஷேகம், சத்யா நாராயணா பூஜை, விஷ்ணு சஹஸ்ர நாமம் சிறப்பு அம்சமாக அமைந்தது. பங்குபெற்ற அனைவரின் நன்மைக்காகவும் உலக நன்மைக்காகவும் வேண்டி, பிக்ஷை பெற்று, உணவு பரிமாறி தசல் பூஜை இனிதே நிறைவு செய்தனர். தசலில் பங்கேற்ற அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி பெற்ற அத்தாட்சி அல்லது நெகடிவ் அத்தாட்சியுடன் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- தினமலர் வாசகர் நாகராஜன் தொப்பே

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மே 27 முதல் 29 வரை இலங்கையில் மகா சக்தி யோகம்

மே 27 முதல் 29 வரை இலங்கையில் மகா சக்தி யோகம்...

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us