சிசெல்ஸ் ஆலய நவராத்திரி ஐந்தாம் நாள் விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிசெல்ஸ் ஆலய நவராத்திரி ஐந்தாம் நாள் விழா

அக்டோபர் 12,2021 

Comments

சிசெல்ஸ் இந்து சங்க நவசக்தி விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி உற்சவ ஐந்தாம் நாள் விழா அக்டோபர் பதினொன்றாம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. இன்று வளர் பிறை சஷ்டி. ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ முருகப் பெருமானுக்குப் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பதினெட்டு வகை வாசனாதித் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தங்கக் கவசமணிவிக்கப்பட்டு அழகே வடிவாக சண்முகப் பெருமான் காட்சியளித்தார்.

ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கும் விசேஷ அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. கொலு மண்டபத்தில் அம்பிகை இன்று கருணையே வடிவான காஞ்சி காமாட்சியாக உருவெடுத்துக் காட்சி அருளினார். மங்கல மகளிர் இன்றும் ஆர்வத்தோடு பங்கேற்று கருமாரி அம்மன் ஸ்தோத்திரப் பாடல்களைப் பக்திப் பரவசத்தோடு பாடி வழிபட்டனர். கற்பூர நாயகியே கனகவல்லி, கண்ணீரைத் துடைத்திட ஓடி வா அம்மா, காத்திருக்க வைத்திருப்பது சரியா அம்மா என உருக்கத்தோடு பாடியது அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.

மகா லட்சுமி அஷ்டகம், லிங்காஷ்டக ஸ்லோகங்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. ஐயப்பன் நாதஸ்வர இசையில் ஊஞ்சல் பாடல் ஒலிக்க சோடஸ உபசார மகா தீபாராதனை நடைபெற்றது கண்கொள்ளாக் காட்சியாகும். கலந்து கொண்ட மகளிர் அனைவருக்கும் வண்ணத் தட்டில் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. சௌபாக்கிய திரவிய அட்சதை ஆசிர்வாதமும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க இன்றும் அன்னப் பிரசாதத்தில் சுண்டல், வடை, பாயசத்துடன் தக்காளி சாதம் இடம் பெற்றது. அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகம் சிறப்பாகச் செய்திருந்தனர்.

- தினமலர் வாசகர்  சி.என்.பிள்ளை




Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us