சிசெல்ஸ் ஆலய நவராத்திரி ஆறாம் நாள் விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிசெல்ஸ் ஆலய நவராத்திரி ஆறாம் நாள் விழா

அக்டோபர் 13,2021 

Comments

 சிசெல்ஸ் இந்து சங்க நவசக்தி விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி ஆறாம் நாள் உற்சவம் 12.10.2021 செவ்வாய்க் கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீகாந்த் சிவாச்சாரியாரின் கண்கவர் அலங்காரத்தில் ஸ்ரீ அன்னை அஷ்டபுஜ துர்க்கை வடிவத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். 

ஒவ்வொரு நாளும் மங்கல மகளிர் முன்னாளை விட அதிக அளவில் பங்கேற்று பக்திப் பரவசத்தோடு பாமாலை பாடி பிரார்த்திப்பது ஆலய நிர்வாகத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. வருகை புரிந்தோர் அனைவருக்கும் சௌபாக்கிய திரவியங்கள், அருட் பிரசாதங்கள், அட்சதை ஆசிர்வாதமென ஆலய சிவாச்சார்யர்களின் சேவை பக்தர்களிக் கண்களில் நீரைப் பணிக்க வைக்கின்றன. ஸ்ரீ சோடஸ உபசார மகா தீபாராதனை மனமுருக வைக்கிறது. நாதஸ்வர ஊஞ்சல் பாட்டு கூடுதல் தெய்விக உணர்வை அளிக்கிறது. 

மங்கல மகளிர் முளைப்பாரி பாலிகை இடும் பணியிலும் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டனர். வழக்கம் போல அன்னப் பிரசாதமும் வழங்கப்பட்டது. ஆலய நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்புறச் செய்து வருகின்றனர்.

- தினமலர் வாசகர் : சி.என்.பிள்ளை

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us