சிசெல்ஸ் ஆலய நவராத்திரி ஏழாம் நாள் விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிசெல்ஸ் ஆலய நவராத்திரி ஏழாம் நாள் விழா

அக்டோபர் 14,2021 

Comments

சிசெல்ஸ் இந்து சங்க நவசக்தி விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி ஏழாம் நாள் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீ அன்னை கண்கவர் சாகம்பரி அலங்காரத்தில் அன்ன பூரணியாக எழுந்தருளி அருள்பாலித்தார். கொலு மண்டபம் காய்கறித் தோரணத்தால் எழில் பெற்றுத் திகழ்ந்தது.

சின்னஞ் சிறு தீவில் வியந்து போற்றுமளிவிற்கு காய் – கனிகள் சேகரிக்கப்பட்டு அலங்காரம் செய்விக்கப்பட்டமை பாராட்டுக்குரியதாகும் பக்தப் பெருமக்கள் ஆர்வத்தோடு காய் கனிகளை சமர்ப்பித்தனர். ஆலயத் தலைவர் சந்திரன் நாகராஜன் பிள்ளை உட்பட ஆலயப் பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து காய் கனிகளை முழு ஈடுபாட்டுணர்வுடனும் அர்ப்பணிப்போடும் கோர்த்தும் சேர்த்தும் அழகுபடுத்தியது மெய் சிலிர்க்க வைத்தது. பிரபஞ்சம் பசியற்றதாக – பிணியற்றதாக ஆரோக்கிய உணவு பெற அருள்புரிய இத்தகு அலங்காரம் செய்யப்படுகிறது.

பக்தப் பெருமக்கள் ஆலயம் நிரம்பி வழிய மிகக் கட்டுப்பாட்டுடன் தனி மனித இடைவெளி விட்டு முகக் கவசமணிந்து கலந்து கொண்டு ஸ்ரீ அம்பாளை சேவித்தனர். மங்கல மகளிர் லலிதா சகஸ்ரநாமம் முதலிய ஸ்லோகங்களை மனமுருகிப் பாடி வழிபட்டனர். மூலவர் ஸ்ரீ அம்பாளும் காய் – கனி அலங்காரத்தில் ஜொலித்தார். ஐயப்பன் – பிரபாகரன் தெய்விக நாதஸ்வர இசை முழங்க சோடஸ உபசார மகா தீபாராதனை நடைபெற்றது.

பங்கேற்றோருக்கு சௌபாக்கிய திரவிய – அட்சய ஆசிர்வாதத்தை சிவாச்சார்யார்கள் வழங்கினர். இன்று அருள் பிரசாதத்துடன் அன்னப் பிரசாதமாக வடை பாயசத்துடன் வெஜிடபிள் புலவு பக்தர்களுக்குத் திகட்டுமளவுக்கு வழங்கப்பட்டது. ஆலய மேலாண்மைக் குழுத் தலைவர் சந்திரன் நாகராஜன் பிள்ளையின் தன்னலமற்ற இறை சேவையை தீவு மக்கள் அனைவரும் பாராட்டுகின்றனர் என்பது குறிப்பிடத் தகுந்ததாகும்.

- தினமலர் வாசகர் சி.என்.பிள்ளை

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி...

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்...

டிசம்., 11 வியக்க வைக்கும் தமிழர் கட்டடக்கலை

டிசம்., 11 வியக்க வைக்கும் தமிழர் கட்டடக்கலை...

நவம்., 19 ல் சிசெல்சு இந்து கோயிலில் கார்த்திகை தீபம்

நவம்., 19 ல் சிசெல்சு இந்து கோயிலில் கார்த்திகை தீபம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us