சிசெல்ஸ் ஆலயத்தில் சரஸ்வதி பூஜை கோலாகலம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிசெல்ஸ் ஆலயத்தில் சரஸ்வதி பூஜை கோலாகலம்

அக்டோபர் 15,2021 

Comments

சிசெல்ஸ் இந்து சங்க நவசக்தி விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி எட்டாம் நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ அம்பிகை – சரஸ்வதி தேவி – கலைவாணியாக எழுந்தருளி வெள்ளைத் தாமரையில் வீற்றிருந்து – வீணையைக் கைகளில் ஏந்தி – கொள்ளை இன்பம் தரும் வகையில் சர்வ அலங்கார நாயகியாகப் பரிணமித்து அருள்பாலித்தது தெய்வீக உணர்வை ஊட்டியது.

சிறப்பு விருந்தினர்களாக சிசெல்ஸ் நாட்டுக்கான இந்திய ஹை கமிஷனர் தம்பதி வருகை புரிந்து கலைமகளை தரிசித்து மகிழ்ந்தனர். இவர்களுக்கு ஆலய மேலாண்மைக் குழுத் தலைவர் சந்திரன் நாகராஜன் பிள்ளை – கிருஷ்ணவேணி தம்பதியர் தனித்தனியே அருள் பிரசாத நினைவுப் பொருள் வழங்கி கவுரவித்தனர். மூலவர் அம்பாளும் சரஸ்வதித் திருக்கோலத்திலேயே எழுந்தருளி அருள்பாலித்தார்.

முத்தாய்ப்பு நிகழ்வாக பக்தப் பெருமக்களுக்கு அருட் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி இடம் பெற்றது. இதற்கென நேற்றுக் காலை முதலே ஆலயத் தலைவர் – சிவாச்சார்யார்கள் முதலான பணியாளர்கள் அனைவருமே ஒருங்கிணைந்து பிரசாதப் பொருட்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். நானூறு இந்திய மங்கல மகளிருக்குப் புத்தம் புதிய தட்டில் புடவை – ரவிக்கைத் துண்டு – மங்கல நாண் ( தாலிச் சரடு ) மஞ்சள் – குங்குமம் – வெற்றிலை பாக்கு – சிசெல்ஸ் நாணயம் – மலரொன்றும் பழமொன்றுமென சௌபாக்கிய திரவிய – அட்சய ஆசிர்வாதத்துடன் தனித் தனியே அழைத்து வழங்கப்பட்டது.

வட இந்தியப் பெண்கள் நூறு பேருக்கு இதே போல மங்கலப் பொருட்களுடன் சுடிதார் செட் வழங்கி மகிழ்விக்கப் பட்டது. சிறுவர் – சிறுமியர் நூறு பேருக்கு சிலேட்டு – நோட்டுப் புத்தகங்கள் – பேனா முதலியன அளித்துக் குதூகலித்தலில் ஆழ்த்தப்பட்டது. இரவு ஏழு மணிக்கு தொடங்கிய இந்நிகழ்வு ஒன்பதரை மணிக்கே நிறைவு பெற்றது. இப்படி ஒரு நிகழ்வு வேறு எந்த ஆலயத்திலாவது நடைபெற்றிருக்குமா என்பது வியப்புக்குரியதே.

கொள்ளை இன்பம் வழங்கிய கலைமகளின் ஆசிர்வாதத்தால் ஆலயத் தலைவர் சந்திரன் நாகராஜனின் அயரா முயற்சியால் இத்தகு அரிய நிகழ்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத் தகுந்தது. மாதர் தீங்குரல் பாட்டில் கலைவாணி இருப்பாள் அல்லவா ? மக்கள் பேசும் மழலையில் சரஸ்வதி தேவி மலருவாள் அல்லவா ? எனவே நாள்தோறும் லலிதா சகஸ்ரநாமம் முதலிய நாமாவளியை மனமுருகி உருக்கத்தோடு பாடி பாமாலை சூட்டிய மங்கல மகளிர்க்கு சரஸ்வதி மாதாவின் அருட்பிரசாதம் பொருத்தம்தானே ? மங்கல ஊஞ்சல் இசையில் சோடஸ உபசார மகா தீபாராதனையில் சிறப்பு விருந்தினர் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர்.

நிறைவாக அன்னப் பிரசாதம். அனைத்துக் காய் கறிகளும் கொண்ட சுவைமிகு சாம்பார் சாதம் மயிலாடுதுறை ராமன் சுப்பிரமணியம் தயாரிப்பில் பக்தர்களுக்குப் “ போதும் ..போதும் “ என்ற அளவுக்கு வழங்கப்பட்டது. சுருங்கக் கூறின் சிசெல்ஸ் தீவு இது வரை கண்டிராத அளவு சிறப்புடையதாக இன்றைய கலைமகள் விழா விளங்கியது எனலாம். இந்து சங்கத் தலைவர் சந்திரன் நாகராஜன் பிள்ளையின் இறைசேவையை அனைவரும் பாராட்டினர்.

- தினமலர் வாசகி கிருஷ்ணவேணி

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி...

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்...

டிசம்., 11 வியக்க வைக்கும் தமிழர் கட்டடக்கலை

டிசம்., 11 வியக்க வைக்கும் தமிழர் கட்டடக்கலை...

நவம்., 19 ல் சிசெல்சு இந்து கோயிலில் கார்த்திகை தீபம்

நவம்., 19 ல் சிசெல்சு இந்து கோயிலில் கார்த்திகை தீபம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us