பிரான்ஸ், பாரிஸ் புறநகரில், ஷேல் ஊரில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவ-சுப்பிரமணிய-ஸ்வாமி ஆலயத்தில் பரிவார தேவியாக அருள்பாலிக்கின்ற ஸ்ரீ மூகாம்பிகை அன்னைக்கு, ப்லவ வருஷ சாரதா நவராத்திரி சிறப்பு பூஜை, மும்மூன்று நாட்களாக முறையே விசேஷ குங்கும, ஸ்வர்ண, ஸ்வேத கமல அர்ச்சனையுடன் நடைபெற்றது.
விஜயதசமி தினத்தன்று காலை வித்தியாரம்பமும் (புதிதாக கலை மற்றும் கல்வி துவக்குவித்தல்) மற்றும் மாலை நிறைவாக மானம்பு உற்சவம் (மஹிஷாசுர சம்ஹாரம்) முடிந்தப்பின் அம்பாளின் உக்கிரம் தணிய பால் அபிஷேகம் இடம்பெற்றது. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த அம்மனை தரிசித்தபின்பு அர்ச்சனை வழிபாடுகளை மேற்கொண்டனர்.
- தினமலர் வாசகர் ஹரேராம் தியாகராஜன்
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.