சிசெல்ஸ் ஆலயத்தில் புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமை உற்சவம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிசெல்ஸ் ஆலயத்தில் புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமை உற்சவம்

அக்டோபர் 18,2021 

Comments

சிசெல்ஸ் இந்து சங்க நவசக்தி விநாயகர் ஆலயத்தில் புரட்டாசி கடைசி சனிக்கிழமை மஹோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்வாலயத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு உடனுறை ஸ்ரீ மகாலட்சுமிக்குத் தனி சன்னதி உள்ளது. இதே போல ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயம் வலம் வந்தருளும் போது விசேஷ எழிலார் பெரிய குடையும் உண்டு.

இந்த சனிக்கிழமை அஷ்ட்டாக்ஷரி ஹோமம் தலைமை அர்ச்சகர் தண்டபாணி சிவாச்சார்யார் தலைமையில் வேத விற்பன்னர்களால் நடத்தப்பட்டது. “ ஓம் நமோ நாராயணா...” எனப் பிரார்த்தித்த பிரகலாதனுக்கு ஸ்ரீமந் நாராயணன் நேரில் காட்சி அருளிய விசேஷ ஹோமமே இது. தொடர்ந்து ஹோமத்தில் வைக்கப்பட்ட புனித கலசம் ஆலயம் வலம் வரப் பெற்றது. ஸ்ரீ மகா விஷ்ணுவுக்கு விசேஷத் திருமஞ்சனமும் கலசாபிஷேகமும் கண்கொள்ளாக் காட்சியாகும். ஆலய வித்துவான்கள் “ சீனிவாசா, கோவிந்தா, வெங்கட்ட ரமணா கோவிந்தா ‘ என மங்கல இசையில் வாசிக்க பக்தப் பெருமக்கள் மெய் மறந்து “ கோவிந்தா ..நாராயணா... வைகுந்தவாசா “ என உருக்கத்தோடு முழங்கியமை மெய்சிலிர்க்க வைத்தது.

இத்தீவில் நார்த்தங்காய் ஏராளமாகக் கிடைக்கிறது. அபிஷேகத்தில் நார்த்தங்காய்ச் சாறும் சேர்க்கப்படுவது இவ்வாலயத்துக்கே உள்ள தனிச் சிறப்பாகும். ஆலய மேலாளர் வினோத் சுப்பிரமணியம் கைவண்ணத்தில் துளசியும் வெள்ளை ரோஜாவும் கலந்த மாலை வெண்தாமரை போல் காட்சியளிக்க, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்திய வடை மாலை முடி சூடப் பெருமாள் தங்கக் கவசமணிந்து ஜொலித்த காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும். இது சிசெல்ஸ் வைகுந்தமாக மிளிர்ந்தது எனலாம்.

சோடஸ உபசார மகா தீபாராதனை நிறைவு பெற்றுப் பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல், புளியோதரை முதலியவை அன்னப் பிரசாதமாக வழங்கப்பட்டன. அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய மேலாண்மைக் குழுத் தலைவர் சந்திரன் நாகராஜன் பிள்ளை சிறப்புறச் செய்திருந்தார்.

- தினமலர் வாசகர் சி.என்.பிள்ளை

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

டிசம்., 18 பாரதியாரின் இலக்கியப் படைப்புகளை நினைவு கூறும் போட்டி நிகழ்ச்சி

டிசம்., 18 பாரதியாரின் இலக்கியப் படைப்புகளை நினைவு கூறும் போட்டி நிகழ்ச்சி...

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி...

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்...

டிசம்., 11 வியக்க வைக்கும் தமிழர் கட்டடக்கலை

டிசம்., 11 வியக்க வைக்கும் தமிழர் கட்டடக்கலை...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us