லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சஷ்டி மஹோத்ஸவம், திருக்கல்யாணம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சஷ்டி மஹோத்ஸவம், திருக்கல்யாணம்

நவம்பர் 15,2021 

Comments

லேகோஸ், நைஜீரியா: கோவிட் விதிமுறைகளை திட்டவட்டமாக கடைப்பிடித்து ஒன்றரை வருடம் கழித்து லேகோஸ் கோயிலில் முதல் வைபவம் முருகன் திருக்கல்யாணத்துடன் துவங்கியது. லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தீபாவளி அன்று சஷ்டி மஹோத்ஸவம் காப்பு கட்டுதலுடன் ஆரம்பமானது. ஒரு வாரம் முழுவதும் முருகன் அருளால் அவன் புகழ் பாடப்பட்டது. விசேஷ அர்ச்சனைகளும் அலங்காரமும் காலையிலும் மாலையிலும் ஶ்ரீ சுப்பிரமணியருக்கு சஷ்டி கால வழிபாடாக செய்யப்பட்டது.

முதல் நாள்: ஸஹஸ்ரநாம அர்ச்சனை, பாலமுருகன் அலங்காரம்

இரண்டாம் நாள்: சத்ரு சம்ஹார திரிசிதி அர்ச்சனை, சிவபாலன் அலங்காரம்

மூன்றாம் நாள்: சண்முக அர்ச்சனை, பழனி ஆண்டவர் அவங்காரம்

நான்காம் நாள்: சுப்பிரமணிய திரிசதை அர்ச்சனை, சிவ த்யானம் அலங்காரம்

ஐந்தாம் நாள்: ஸஹஸ்ரநாம அர்ச்சனை, ராஜ அலங்காரம்

ஆறாம் நாள்: கந்தன் அஷ்டோத்திரம், சூரசம்ஹாரம் - விஸ்வரூப தரிசனம்

ஒவ்வொரு நாளும் ஆறு முறை சஷ்டி கவசம் மற்றும் ஒருமுறை ஸ்கந்த குரு கவசம் பாடப்பட்டது. நவம்பர் 7ம் தேதி குழந்தைகள் கோயில் வளாகத்தில் முதல் முறையாக சஷ்டி கவசம் பாராயணம் செய்தார்கள்.

நவம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் மாலைகள், தோரணம், ஊஞ்சல், கல்யாணம் என விமர்சையாக கொண்டாடப்பட்டது. வள்ளி தேவசேனை சமேத சுவாமி காட்சி அளித்து 200க்கும் மேற்பட்ட ஹருதயத்தில் நீங்காது நிலைத்திருக்க அருள் பாலித்தார். முக்திக்கு வித்தான முருகன் புகழ் பாடி அவன் அருளில் திளைத்தனர் லேகோஸ் வாழ் தமிழ் மக்கள்.

- நமது செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்



Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்...

ஜன.,8 ல் பொங்கல் விழா கொண்டாட்டம்

ஜன.,8 ல் பொங்கல் விழா கொண்டாட்டம்...

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022 ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us