சிசெல்ஸ் ஆலயத்தில் கார்த்திகைத் தீபத் திருவிழா கோலாகலம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிசெல்ஸ் ஆலயத்தில் கார்த்திகைத் தீபத் திருவிழா கோலாகலம்

நவம்பர் 21,2021 

Comments

சிசெல்ஸ் இந்து சங்க நவசக்தி விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 19 ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. காலையில் உற்சவப் பெருமானான முருகப் பெருமானுக்கும் ஸ்ரீ வள்ளி – தேவசேனாவுக்கு சிறப்பு அபிஷேகங்கள் – ஆராதனைகள் – அலங்காரங்கள் நடைபெற்றன.

பால முருகனுக்கு – கார்த்திகைப் பெருமானுக்கு இப்பகுதியில் பிரபலமான நார்த்தம்பழச் சாறு உள்ளிட்ட பதினெண் வகை வாசனாதித் திரவியங்களால் நடைபெற்ற அபிஷேகமும் சொர்ணாபிஷேகமும் கண்கொள்ளாக் காட்சியாக மிளிர்ந்தன. பக்தப் பெருமக்களின் சகஸ்ரநாமப் பாராயணமும் அர்ச்சனையும் அனைவரையும் ஈர்த்தன.

விசேஷமாக இத்திருவிழாவுக்கென்றே தயாரிக்கப்பட்ட தீபங்களை ஆலயத் தலைவர் சந்திரன் நாகராஜன் – கிருஷ்ணவேணி தம்பதியர் சன்னதியின் பிரதான பகுதிகளில் ஏற்றிட சுமார் 350 பேர் பின்தொடர்ந்து ஆலயத்தில் அவரவர்கட்குப் பிடித்த இடங்களில் ஏற்றி வழிபாடு செய்தனர்.

முருகப் பெருமானுக்குச் சிறப்புப் பட்டு சாற்றி சர்வ அலங்கார நாயகராகக் காட்சியளிக்கத் தலைமை அர்ச்சகர் தண்டபாணி சிவாச்சாரியார் “ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா “ என பக்தப் பெருமக்கள் முழங்க பரணி தீபத்தை ஆலயத்தின் உச்சியில் ஏற்றினார். அழகே வடிவான சண்முகன் வள்ளி தேவ சேனா சமேதராக உள் வீதி வலம் வந்து அருள்பாலித்தார். தொடர்ந்து சொக்கப் பனை கொளுத்தப்பட்டது. சொக்கப்பன் – சாட்சாத் சிவபெருமானே இதன் மூலம் வெளிப்படுவதாக ஐதிகம்.

இவ்வாலயத்தின் சிறப்பு தீபத் திருநாள் முதல் இருபத்தொரு நாடகள் கேதார கௌரி விரதம் போல திருவிளக்கில் பிள்ளையாரை – முழுமுதற் கடவுளாம் விநாயகப் பெருமானை எழுந்தருளச் செய்து இங்குள்ள நகரத்தார் பெருமக்கள் பானகம் நைவேத்தியம் செய்து யாழ்ப்பாணத் தமிழில் கதை படித்துப் பாராயணம் செய்வது மெய் சிலிர்க்க வைக்கும். ஆலயம் முழுவதும் தீப விளக்குகள் ஜெகஜ்ஜோதியாகப் பிரகாசித்தது தீவு முழுவதுமே ஒளி வடிவமாக இறைவன் தாண்டவமாடுவது போலக் காட்சி அளித்தது.

பங்கேற்ற பக்தப் பெருமக்களுக்கு காளாஞ்சிப் பிரசாதமும் அன்னப் பிரசாதமும் வழங்கப்பட்டன. அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய மேலாண்மைக் குழுத் தலைவர் சந்திரன் நாகராஜன் பிள்ளை சிறப்புறச் செய்திருந்தார்.

- தினமலர் வாசகர் சி.என்.பிள்ளை

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்...

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்...

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022 ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us