சிசெல்ஸ் ஆலயத்தில் கார்த்திகை முதல் சோம வார வழிபாடு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிசெல்ஸ் ஆலயத்தில் கார்த்திகை முதல் சோம வார வழிபாடு

நவம்பர் 23,2021 

Comments

சிசெல்ஸ் இந்து சங்க நவசக்தி விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை முதல் சோம வார வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்வாலயத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ சிவகாமி உடனுறை நடராஜப் பெருமானுக்கு 108 சங்காபிஷேகம் பக்தர்கள் கண்குளிர நடைபெற்றது. காலையில் சிறப்பு ஹோமம் தலைமை அர்ச்சகர் தண்டபாணி சிவாச்சாரியார் தலைமையில் ஸ்ரீகாந்த சிவாச்சாரியார் துணையுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மாலை 5.30 மணிக்கு யாகத்தில் வைத்துப் பூஜிக்கப்பட்ட புனித கலசம் ஆலயம் வலம் வரப்பெற்று கலசாபிஷேகம் நடைபெற்றது. 108 சங்குகளும் உடன் வரப்பட்டன. சிவபெருமான் சிவகாமி அன்னை முன் சங்குகள் சமர்ப்பிக்கப்பட்டு விசேஷ பூஜை செய்யப்பட்டது சோடஸ உபசார மகா தீபாராதனை தொடர்ந்தது. பதினோரு உபயதாரர்கள் சங்காபிஷேகத்தில் கலந்து கொண்டனர்.

கேதார கௌரி விரதம் போன்று திருவிளக்கில் பிள்ளையார் ஆவாஹணம் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நகரத்தாரால் மேற்கொள்ளப்படும் விரதம் நான்காவது நாளாகப் பின்பற்றப்பட்டது. விரதமிருந்து கதை பாராயணம் செய்வது கண்கொள்ளாக் காட்சியாகும். 108 சங்காபிஷேகக் காட்சி மெய்சிலிர்க்க பக்தப் பெருமக்கள் “ ஓம் நமசிவாயா “ முழக்கமிட்டனர். வழிபாடு நிறைவு பெற்றதும் பக்தர்களுக்கு எலுமிச்சை சாதம், சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய மேலாண்மைக் குழுத் தலைவர் சந்திரன் நாகராஜன் பிள்ளை சிறப்புறச் செய்திருந்தார்.

- தினமலர் வாசகர் சி.என்.பிள்ளை

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

டிசம்., 18 பாரதியாரின் இலக்கியப் படைப்புகளை நினைவு கூறும் போட்டி நிகழ்ச்சி

டிசம்., 18 பாரதியாரின் இலக்கியப் படைப்புகளை நினைவு கூறும் போட்டி நிகழ்ச்சி...

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி...

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்...

டிசம்., 11 வியக்க வைக்கும் தமிழர் கட்டடக்கலை

டிசம்., 11 வியக்க வைக்கும் தமிழர் கட்டடக்கலை...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us