சிசெல்ஸ் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிசெல்ஸ் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

நவம்பர் 24,2021 

Comments

சிசெல்ஸ் இந்து சங்க நவசக்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நவம்பர் 23 ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. மூலமந்திர கணபதி ஹோமம் நடைபெற்று புனித கலசம் ஆலயம் வலம் வரப் பெற்று சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், கலசாபிஷேகம், சொர்ணாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றன. ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு திருமுகத்தில் சந்தனக் காப்பிட சர்வ அலங்கார நாயகராக முழுமுதற் தெய்வம் காட்சியளித்தார்.

விநாயகப் பெருமானுக்கே உரிய நைவேத்தியமான மோதகம், கொழுக்கட்டை, சுண்டல் படைக்கப்பட்டு சோடஸ உபசார மகா தீபாராதனை நடைபெற்றபோது பக்தப் பெருமக்கள் “ ஓம் ஸ்ரீ மகா கணபதையே நம: “ என பக்திப் பரவசத்தோடு முழங்கினர். சகஸ்ரநாம அர்ச்சனை, பாராயணமும் நடைபெற்றன. யாழ் தமிழர்களின் ஐந்தாம் நாள் விரதம் தொடர அவர்களின் அழகுதமிழ் கதைப் பாராயணம் அனைவரையும் ஈர்த்தது.

பங்கேற்ற பக்தப் பெருமக்களுக்கு அருட் பிரசாதத்தோடு அன்னப் பிரசாதமும் வழங்கப்பட்டன. அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய மேலாண்மைக் குழுத் தலைவர் சந்திரன் நாகராஜன் பிள்ளை செய்திருந்தார்.

- தினமலர் வாசகர் சி.என்.பிள்ளை

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

டிசம்., 18 பாரதியாரின் இலக்கியப் படைப்புகளை நினைவு கூறும் போட்டி நிகழ்ச்சி

டிசம்., 18 பாரதியாரின் இலக்கியப் படைப்புகளை நினைவு கூறும் போட்டி நிகழ்ச்சி...

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி...

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்...

டிசம்., 11 வியக்க வைக்கும் தமிழர் கட்டடக்கலை

டிசம்., 11 வியக்க வைக்கும் தமிழர் கட்டடக்கலை...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us