அமீரக குறும்படவிழா 2021 | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அமீரக குறும்படவிழா 2021

நவம்பர் 25,2021 

Comments

துபாய் : கடல் கடந்து வாழும் போதும் கலை வளர்ப்பதிலும் அதை வெளிப்படுத்துவதிலும் மனிதனுக்கு எப்போதும் மட்டற்ற மகிழ்ச்சிதான். ஐக்கிய அரபு நாட்டில் வாழும் தமிழர்களின் எழுத்து இயக்கம் நடிப்பு திறனுக்கு ஒரு நல்வாய்ப்பாக அமைகிறது ‘குறுநாடக குழு’ அமீரக குறு நாடக விழா’ அமைப்பாளர்களும், அவர்களுடன் இணைந்து ஆர்வத்துடன் கடந்த ஐந்து வருடங்களாக பங்கு பெறும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடக கலைஞர்களும், மேடை நாடகங்கள் மற்றும் குறும்படங்களை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

2016 முதல் வருடம் தோறும் மேடை நாடக வடிவில் அமீரகத்தில் நடந்து வந்த இவ்விழா கடந்த வருடம் போன்றே இவ்வருடமும் தற்கால சூழலுக்கு உட்பட்டு, ‘குறும்பட விழா’ வாக நடைபெறப்போகிறது. குறும்படங்களுக்கு கதை எழுத, இயக்க, நடிக்க, ஆர்வமுள்ள அனைவரும் இதில் பங்கு பெற முன் வர வேண்டும் என்றும், இத்தகைய திறமைகள் பொருந்திய பல அமீரக தமிழ் ஆர்வலர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்றும் அமைப்பாளர்கள் அன்புடன் அழைப்பு விடுகின்றனர்.

புதுமையும் சுவாரசியமும் நிறைந்த கதை களங்கள், நடிப்பு திறன், இசை, காட்சி வடிவமைப்பு, அனுபவம் வாய்ந்த பிரபல தமிழ் நாடக நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்களின் தலைமை மற்றும் மதிப்பீடு, பெரும் நிறுவனங்களின் உறுதுணை இவை அனைத்தும் இவர்களது விழாவின் வெற்றிக்கான சிறப்பம்சங்களாகும். நாடக கலைஞர்கள் பத்திற்கும் மேற்பட்ட வகையில் எழுத்து, இயக்கம், நடிப்பு, இசை, எடிட்டிங், திரை கதை வடிவம், ஒளிப்பதிவு, இவற்றில் பரிசுகள் பெற ஊக்குவிக்கப்படுவர்.

பங்கு பெறும் அனைத்து கலைஞர்களுக்கும் சான்றிதழும் வெற்றியாளர்களுக்கு சிறப்பு பரிசும் தரப்படும். மேலும் தகவல்களுக்கு பங்கேற்பாளர்கள் அமீரக குறு நாடக குழுவினரின் முக நூல் பக்கமான

https://www.facebook.com/UAEKurunatagam/

நுழைந்தால் தெரிந்து கொள்ளலாம் என்றும், 2021 டிசம்பர் 5ம் தேதிக்குள் தங்களின் புத்தம் புதிய படைப்புகளை அனுப்பி வைக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி...

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்...

நவம்., 19 ல் சிசெல்சு இந்து கோயிலில் கார்த்திகை தீபம்

நவம்., 19 ல் சிசெல்சு இந்து கோயிலில் கார்த்திகை தீபம்...

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022 ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us