மலேசியாவில் நீண்ட நேரம் ஒரே யோகாசனம் சாதனை நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மலேசியாவில் நீண்ட நேரம் ஒரே யோகாசனம் சாதனை நிகழ்ச்சி

நவம்பர் 29,2021 

Comments

மலேசிய தலைநகரம் கோலாலம்பூர் பிரீக்பீல்ட்ஸ் -ல் அமைந்துள்ள விவேகானந்தா ஆசிரமத்தில் நவம்பர் மாதம் 29 ஆம் தேதி நீண்ட நேரம் ஒரே யோகாசனம் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

உலக யோகா விளையாட்டு அமைப்பின் இயக்குனர், யோகாச்சாரியார் ராதா கிருஷ்ணன் கனடிய அமேசிங்க் ஒலிம்பிய சாதனை புத்தகம் சார்பாக நடுவராக மற்றும் மலேசிய தேசிய சாதனை புத்தகம் சாதனை நிகழ்விற்கு வழிகாட்டியாகவும் பங்கேற்றார்.

மலேசிய அஷ்டாங்கா யோகா கூட்டமைப்பை சேர்ந்த யோகா ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மலேசிய தேசிய சாதணை புத்தகம் மற்றும் கனடிய அமேசிங்க் ஒலிம்பிய சாதனை புத்தகதில் இடம் பெறும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அதில் மலேசிய தேசிய சாதனை புத்தகம் நிகழ்வில் பங்கேற்றவர்கள்:

1. சிலாங்கூர் மாநிலம் அம்பாங்க் நகரை சேர்ந்த அக்ஷிணோம் ஹதா யோகா நிறுவன தலைவர் சிந்தாமணி அருனாசலம் அர்த்த மத்ஸ்யேந்திரசானத்தில் 25 நிமிடங்கள்

2. சபா மாநிலம் சண்டாகாண் நகரை சேர்ந்த பிரணவ யோக தெரபி ஸ்டூடியோ நிறுவன தோற்றுனர் மற்றும் இயக்குனர் ஹேமாமாலினி சாமினாதன் சேது பந்தாசனத்தில் 20 நிமிடங்கள்

3. கெடா மாநிலம் சேர்ந்த சுங்கை பட்டாணி நகரம் அஷ்டாங்கா யோகா பயிற்சி மையத்தை சேர்ந்த பரதன் குன்சுராமன் ஏக பாத சிரசாசனத்தில் 33 நிமிடங்கள்

4. கெடா மாநிலம் சேர்ந்த சுங்கை பட்டாணி நகரம் மாதவ ஜோதி தபோவனம் யோகா பயிற்சி மையத்தை சேர்ந்த தீபன் ஜீவன் ஜோதி பத்ம சர்வாங்காசனத்தில் 30 நிமிடங்கள்

நீண்ட நேரம் ஒரே யோகாசனம் இருந்து மலேசிய தேசிய சாதணை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.

தொடர்ச்சியாக கனடிய அமேசிங்க் ஒலிம்பிய சாதனை புத்தகம்: சபா மாநிலம் சண்டாகாண் நகரை சேர்ந்த பிரணவ யோக தெரபி ஸ்டூடியோ நிறுவன தோற்றுனர் மற்றும் இயக்குனர் ஹேமாமாலினி சாமினாதன் ஹலாசனத்தில் 06 நிமிடம் 18 வினாடிகள் இருந்து கனடிய அமேசிங்க் ஒலிம்பிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உலக சாதனை புரிந்தார். இதற்கு முன்பாக நவம்பர் மாதம் 15ஆம் திகதி 8 அஷ்டாங்கா யோகா கூட்டமைப்பு உறுப்பினர்கள் இதே உலக சாதனை புரிந்தது குறிப்பிடதக்கது.

இந்நிகழ்சிக்கு மலேசிய அஷ்டாங்கா யோகா கூட்டமைப்பின் தோற்றுனர் யோக பாரதி அமுதா கௌவரப்பன் சாதனை புரிந்தவர்களை பாராட்டினார்.

அகில உலக யோகா விளையாட்டு அமைப்பின் இயக்குனர் ராதா கிருஷ்ணன் கனடிய அமேசிங்க் ஒலிம்பிய சாதனை புத்தகம் சார்பாக நடுவராக வருகை புரிந்தார்.

விவேகானந்தா ஆசிரம நிர்வாகி சிவானந்தா செல்லப்பா மற்றும் மலேசிய இஷ்க்கான் இணை பிராந்திய செயலாளர் ஷிம்ஹேஸ்வர தாஷா மலேசிய கூட்டுறவு நாணய சங்கத்தின் முன்னாள் தேசிய பொருளாளர் சாமினாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சாதனை புரிந்தவர்களை பாராட்டினார்.

- நமது செய்தியாளர் வெங்கடேசன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்...

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்...

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022 ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us