சிசெல்ஸ் ஆலயத்தில் கார்த்திகை இரண்டாம் சோம வார சங்காபிஷேக வழிபாடு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிசெல்ஸ் ஆலயத்தில் கார்த்திகை இரண்டாம் சோம வார சங்காபிஷேக வழிபாடு

நவம்பர் 30,2021 

Comments

சிசெல்ஸ் இந்து சங்க நவசக்தி விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ சிவகாமி உடனுறை ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு கார்த்திகை இரண்டாம் சோம வார சங்காபிஷேக வழிபாடு நவம்பர் 29 ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலையில் 108 சங்குகள் ஓம் வடிவில் அமைக்கப்பட்டு விசேஷ பூஜைகளும் ஹோமமும் பக்திப் பரவசத்தோடு நடைபெற்றன.

ஹோமத்தில் வைத்துப் பூஜிக்கப்பட்ட புனித கலசம் ஆலயம் வலம் வரப் பெற்று ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு கலசாபிஷேகமும் சங்காபிஷேகமும் நடைபெற்றன. தொடர்ந்து அம்பலவாணனுக்கு பதினெண் வாசனாதித் திரவியங்களால் அபிஷேகங்கள் கோலாகலமாக நடைபெற்றது கண் கொள்ளாக் காட்சியாக மிளிர்ந்தது. மேலும் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கும் 108 சங்காபிஷேகம் பக்தப் பெருமக்களின் “ ஓம் நமசிவாயா “ முழக்கத்திற்கிடையே வெகு சிறப்பாக நடைபெற்றது.

பக்தப் பெருமக்கள் முகக் கவசமணிந்து சமூக இடைவெளி விட்டமர்ந்து இக் கண்கொள்ளாக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு அருட் பிரசாதமும் அன்னப் பிரசாதமும் வழங்கப்பட்டன. அனைத்து ஏற்பாடுகளையும் ஆலயத் தலைவர் சந்திரன் நாகராஜன் பிள்ளை சிறப்புறச் செய்திருந்தார்.

- தினமலர் வாசகர் சி.என்.பிள்ளை

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்...

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்...

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022 ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us