நியூ ஜெர்சியில் திருக்கடையூர் அபிராமி வைபவம் மற்றும் நாயன்மார் கோலங்கள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நியூ ஜெர்சியில் திருக்கடையூர் அபிராமி வைபவம் மற்றும் நாயன்மார் கோலங்கள்

டிசம்பர் 01,2021 

Comments

மார்ல்பரோ, நியூஜெர்சி: நியூஜெர்சி மாநிலம், மார்ல்பரோ நகரத்தில் உள்ள ஶ்ரீ குருவாயூரப்பன் கோவிலில் கடந்த அக்டோபர் மாதம் 17ம் தேதி அன்னை அபிராமி சமர்ப்பணம் என்ற தலைப்பில் பக்தி மஞ்சரி மஹிளா குழுவினரை சேர்ந்த சுமார் நாற்பது பெண்மணிகள் அபிராமி அந்தாதியையும், அபிராமி பதிகத்தையும் பாடி சமர்பித்தார்கள் . இந்த அத்தனை பேருக்கும் தலைமை வகித்து, ஒருங்கிணைத்து,ஏற்பாடு செய்த பெருமை, புவனா வெங்கட்டையே சாரும். மனசிருந்தால் மார்க்கம் உண்டு என்ற பதத்திற்கு ஏற்ப கோவிட் தொற்று ஆரம்பித்த காலத்தில் இருந்து அதாவது மார்ச் 2020 முதல் அக்டோபர் 2021 வரை, புவனா பயிற்சி கொடுத்தார்.

அபிராமி அந்தாதி யை சொல்லி கொடுத்ததோடு மட்டுமல்லாமல், கல்லூரி பாடம் மாதிரி ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் விளக்கி மிகவும் ஸ்ரத்தையோடு சொல்லி கொடுத்து அனைவரையும் பாடவைத்து ஒரு இமாலய காரியமே ஆகும். பிறகு அபிராமி பதிகத்தையும் மிகத் தெளிவாக சொல்லி கொடுத்த பாங்கு, புவனாவின் திறமையே.

அபிராமி அந்தாதியை ஐந்து அந்தாதிக்கு ஒரு ராகம் என பிரித்து, மெட்டமைத்து கொடுத்தவர் குருஜி ராகவன். புவனா முப்பத்தி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் குருஜி ராகவனின் சிஷ்யை மதுரம் மாமியிடம் முறையாக அபிராமி அந்தாதியை கற்றுக் கொண்டுள்ளார். அபிராமி பதிகத்தை, துபாயில் கௌரி ராமகிருஷ்ணனிடம் கற்றுக் கொண்டுள்ளார்.

பயிற்சி பெற்ற பெண்களும், குடும்ப வேலை மற்றும் அலுவலக வேலை எத்தனை இருந்தாலும், வாரம் தவறாமல் கற்றுக் கொண்டு பாடியது மிகவும் சிறந்த விஷயமாகும். இது தவிர, 63 நாயன்மார்கள் கோலங்கள் வரைந்து மிக அழகாக வரிசை படுத்தி இருந்தார்கள். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரம் வேண்டி,பவானி பூஜையும்,குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்காக ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை பூஜையும் நடைபெற்றது.

அம்பிகைக்கு அறுபத்தி நான்கு கலைகளும் பிடிக்கும் என்பதால், பாட்டு, வீணை, மிருதங்கம் , மற்றும் நாட்டியம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி, காலை 9 மணிக்கு ஆரம்பித்து, மதியம் 1;00 மணி வரை நடந்தது. இதை அம்பிகையின் திருமண வைபவம் போல் பாவித்து, சீர் வரிசைகள், பலவிதமான இனிப்பு , முறுக்கு, பழங்கள் மற்றும் உலர் பழங்கள் சமர்பிக்கப்பட்டது.

அன்று,ஸ்ரீ குருவாயூரப்பன் கோயிலில் உள்ள பார்வதி தேவிக்கு, பூ பந்தல் சாற்ற்றப்பட்டது. முத்து குருக்கள் மற்றும் தேஜோ குருக்கள் மிகவும் அழகாக அலங்காரம் செய்து இருந்தார்கள். நிறைவாக, யக்ஞசுப்ரமணியத்தின் உரையாடலுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

முன்னமே,அக்டோபர் பதினைந்தாம் தேதி, பார்வதி தேவிக்கு,, அழகிய ஒன்பது கஜம் புடவை சாத்தி , தங்கமும் வைரத்திலனுமான தாடங்கம் (காதணி), தங்கத்திலான திருமாங்கல்யம், மூக்குத்தி,புல்லாக்கு ,வெள்ளியில் மெட்டி, கொலுசு,மற்றும் தண்டை சாற்றபட்டது. கோவிலில் உள்ள சிவ லிங்கத்திற்கு வெண் பாட்டும், ருத்ராட்ச மாலையும் சாற்றபட்டது.

புவனாவின் கணவர் வெங்கட் உதவி சொல்ல இயலாதது. புவனாவுக்கு உற்ற துணையாக இருந்து எல்லா விதத்திலும் மிக்க உதவி செய்தது ஆனந்தி வெங்கட். இந்நிகழ்ச்சி இனிதாக நிறைவு பெற உதவியவர்களின் தொண்டு குறிப்பிடத்தக்கது. ஆடியோ , மைக் உதவி - ராஜா நடராஜன், வீடியோ உதவி- டாக்டர் ரவி சுப்ரமணியன், போட்டோ உதவி-- ஸ்ரீதர் மற்றும் ப்ரேமினி.

புளோரிடா, கனடா மற்றும் பிற ஊர்களில் இருந்து நேரலையில் பங்கேற்க உதவி செய்தது ராம். அம்பாளுக்கு,பூ அலங்காரத்திற்கு முக்கிய ஏற்பாடுகள் செய்த லதா, மற்றும் பக்தி மஞ்சரி பெற்றோர்கள் அனைவரும், கடைசி வரை இருந்து எல்லா உதவியும் செய்தார்கள். பிறகு நவம்பர் மாதம் 13ஆம் தேதி, பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள சிருங்கேரி சாரதாம்பாள் சன்னிதியிலும் அபிராமி அந்தாதியும் , அபிராமி பதிகமும் பாடினார்கள். தங்க ரத யாத்திரையோடு நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சிகள் உலக நன்மைக்காக பக்தி மஞ்சரி சார்பில் நடத்தப்பட்டது.


https://youtu.be/05aNxtW-tpo


- தினமலர் வாசகி டாக்டர் அலமேலு சூரி

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்...

ஜன.,8 ல் பொங்கல் விழா கொண்டாட்டம்

ஜன.,8 ல் பொங்கல் விழா கொண்டாட்டம்...

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022 ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us