அல் அய்ன் இந்திய சமூக மையத்தில் சிங்கப்பூர் பிரமுகருக்கு வரவேற்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அல் அய்ன் இந்திய சமூக மையத்தில் சிங்கப்பூர் பிரமுகருக்கு வரவேற்பு

டிசம்பர் 05,2021 

Comments

அல் அய்ன் : அல் அய்ன் இந்திய சமூக மையத்தில் சிங்கப்பூர் பிரமுகர் புதிய நிலா மு ஜஹாங்கீருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு அல் அய்ன் இந்திய சமூக மைய தலைவர் கீழக்கரை முபாரக் முஸ்தபா தலைமை வகித்தார். அவர் தனது உரையில் சிங்கப்பூர் சமூக கலை இலக்கிய நற்சேவையாளராகவும், உதவும் கரங்கள் அமைப்பின் தலைவராகவும், பன்னாட்டு வர்த்தக – கலாச்சார வளர்ச்சிப் பேரவையின் பொதுச் செயலாளர், புதிய நிலா திங்கள் இதழின் ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வரும் புதிய நிலா மு ஜஹாங்கீர் இந்த மையத்துக்கு வந்திருப்பது பெருமையளிக்கிறது என்றார்.

அதன் பின்னர் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டார். புதிய நிலா இதழை முபாரக் முஸ்தபாவுக்கு வழங்கினார். சமூக ஆர்வலர்கள் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது மைதீன், திண்டுக்கல் ஜமால் முஹைதீன், முதுவை ஹிதாயத் உள்ளிட்டோருக்கும் முபாரக் முஸ்தபா பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். அப்போது பேசிய சிங்கப்பூர் புதிய நிலா மு ஜஹாங்கீர் அல் அய்ன் இந்திய சமூக மையத்தின் தலைவராக தமிழர் ஒருவர் பொறுப்பு வகிப்பது மிகவும் சிறப்புக்குரியது ஆகும். இந்த மையத்தின் பணிகள் சிறக்க தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்...

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்...

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022 ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us