ட்ராக்ஸ் சார்பில் இணைய வழியில் பல்வேறு போட்டிகள் | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

ட்ராக்ஸ் சார்பில் இணைய வழியில் பல்வேறு போட்டிகள்

டிசம்பர் 11,2021 

Comments

மலேஷியாவை சார்ந்த ட்ராக்ஸ் ஏற்பாட்டில் இணைய வழியில் பல்வேறு போட்டிகள் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற்றது. ட்ராக்ஸ் அமைப்பு இப்போட்டிகள் தொடர்பாக வெளியிட அறிக்கையில் தெரிவித்ததாவது: இணைய வழியில் திருக்குறள், பேச்சுப் போட்டி, கதை கூறுதல், திருமுறை போட்டி, இசை , கிராமிய நடனம், பரதம், யோகாசன விளையாட்டு மற்றும் சதுரங்க போட்டிகள் அணைத்து உலக அளவில் நடைபெற்றன. அதில் அமெரிக்கா, ஜெர்மனி, பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, வியட்ணாம், ஈரான், தாய்லாந்து, இந்தோனேசியா, சீனா மற்றும் இலங்கை நாடுகளில் இருந்து ஏராளமான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

1. இசைப் போட்டி பிரிவில் இசைக் கருவி இயக்குதல் பிரிவில் சாம்பியனாக வர்ஷிணி விவேகானந்தா முதலாவது இடம், நிறைமதி சுடர் பரமானந்தன் இரண்டாம் இடம், நவனேஷ்வரி பாலமுருகன் மூன்றாம் இடம் பெற்றனர் பாட்டுப் போட்டி பிரிவில் மாதேஷ்வசீலன் பரமேஷலன் முதலாம் இடம், சேட்னா நாக்ராஜ் இரண்டாம் இடம், சாதின்ரா தமிழ் செல்வன் மூன்றாம் இடம் பெற்றனர்

2. நடன போட்டியில் சாம்பியனாக காயுவன் முதலாம் இடம், லஷ்மி ப்ரியா பெண்டியாலா இரண்டாம் இடம், நவீனா ஸ்ரீ கருனாகரன் மூன்றாம் இடம் பெற்றனர் 3. கதை கூறுதல் போட்டியில் சாம்பியனாக கிஷேரா தலாம் இடம், அனிஷா ஹரி அருண் இரண்டாம் இடம், லியோன் ஜன்வேர்ன் மூன்றாம் இடம் பெற்றனர் 4. திருமுறை ஓதுதல் போட்டியில் சாம்பியனாக லீனியா தினகரன் முதலாம் இடம், சாந்தி போஸ் ராவ் கங்காதரன் இரண்டாம் இடம், மனோஷ் ராவ் கங்காதரன் மூன்றாம் இடம் பெற்றனர்

5. திருக்குறள், ஒப்புவித்தல் போட்டியில் சாம்பியனாக தமிழழகி பிள்ளை முதலாம் இடம், அனிஷா ஹரி அருண் இரண்டாம் இடம், கிருத்திகா மாதவன் மற்றும் ஹரிணி மூன்றாம் இடம் பெற்றனர் 6. யோகா விளையாட்டுப் போட்டியில் சாம்பியனாக மகளிர் பிரிவில் ரிஷித்ரா வடிவேலன் முதலாம் இடம், வர்ஷிணி விவேகானந்தா இரண்டாம் இடம், கிருஷ்வி மூன்றாம் இடம் பெற்றனர் ஆடவர் பிரிவில் ரோகித் முதலாம் இடம், கௌஸ்தவ் பானர்ஜி இரண்டாம் இடம், பரதன் குன்சுராமன் மூன்றாம் இடம் பெற்றனர்

7. சதுரங்கப் போட்டியில் சாம்பியனாக 9 வயது கீழ் முக்கிய பிரிவில் ஹரித் கமில் சாம்பியனாகவும் சிறந்த மகளிர் பிரிவில் நூருள் ஹெல்வா ஹில்மா சாம்பியனாகவும் சிறந்த பள்ளிகளுக்கான பிரிவில் எஸ் கே ஜலன் 3 பண்டார் பாரு பாங்கி, சிலாங்ககூர் பள்ளி சாம்பியனாகவும் 12 வயது கீழ் முக்கிய பிரிவில் யோங்க் லீ நிங்க் சாம்பியனாகவும் சிறந்த மகளிர் பிரிவில் யோங்க் ஷி முன் சாம்பியனாகவும் சிறந்த பள்ளிகளுக்கான பிரிவில் எஸ் ஜே கே பின் ஹ்வா 1 கிள்ளான் , சாம்பியனாகவும் 15 வயது கீழ் முக்கிய பிரிவில் லீ யுன் ரூய் சாம்பியனாகவும் சிறந்த மகளிர் பிரிவில் கூ யூ கீ சாம்பியனாகவும் சிறந்த பள்ளிகளுக்கான பிரிவில் எஸ் எம் கே புத்ர ஜெயா ப்ரெசிண்ட் 18 (1) புத்ர ஜெயா சாம்பியனாகவும் 18 வயது கீழ் முக்கிய பிரிவில் முகமது இர்சான் டானியல் சாம்பியனாகவும் சிறந்த மகளிர் பிரிவில் ஹெலன் சூ ஷின் ஷு சாம்பியனாகவும் சிறந்த பள்ளிகளுக்கான பிரிவில் எஸ் எம் கே புத்ர ஜெயா ப்ரெசிண்ட் 18 (1) புத்ர ஜெயா சாம்பியனாகவும் தேர்வு பெற்றனர். வெற்றி பெற்ற அணைவருக்கும் சான்றிதழ்கள் இ மெயில் மூலமாக வழங்கப் பட்டது

கூட்டரசு பிரதேசம் மற்றும் சிலாங்கூர் மாநிலத்தின் கலாச்சார மற்றும் கலைத் துறையின் துணை இயக்குனர்கள் விழாவின் இறுதி நாளான நவம்பர் 20 தேதியன்று மெய்நிகர் வழி கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினர். அலோகாஸ் ஆர்ட்ஸ் அகாடமி மற்றும் ட்ராக்ஸ் சங்கமும் இணைந்து நடத்திய TRAACS INTERNATIONAL CARNIVAL 2021 எனும் மாபெரும் விழா அக்டோபர் 19 தொடங்கி நவம்பர் 20 வரை மெய்நிகர் வழி சிறப்பாக நடைப்பெற்றது. இதில் மலேசியா உட்பட 13 நாடுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து பயனடைந்தனர். மலேசிய கல்வியமைச்சு மற்றும் மலேசிய மற்றும் மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் அங்கீகாரத்துடன் நடைப்பெற்றது. இந்நிகழ்வினை முன்னால் வெளியுறவுத் துறை துணையமைச்சரும், மலேசிய இந்திய காங்கிரஸின் துணைத் தலைவருமான டத்தோ அ. கோகிலன் பிள்ளை, குத்துவிளக்கேற்றி அதிகாரபூர்வமாக தொடக்கி வைத்தார்.

நடுவராக பணியாற்றிய மாஸ்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாஸ்டர் ஹேமாமாலினி ஆகியோருக்கு நினைவு பரிசு டிராக்ஸ் செயலாளர் விஜயா வழங்கினார். ஜெயலட்சுமி பிரேம்குமார், யோகா ராதா கிருஷ்ணன், ஷாம் சுந்தர் பிணவாணி, இந்தியா முருகன், கற்பகம் மற்றும் விஜயா ஆகியோர் நன்றி உரை நிகத்தினர்.

- நமது செய்தியாளர் வெங்கடேசன்Advertisement
மேலும் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மே 27 முதல் 29 வரை இலங்கையில் மகா சக்தி யோகம்

மே 27 முதல் 29 வரை இலங்கையில் மகா சக்தி யோகம்...

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us