கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, 'கிறிஸ்துமஸின் தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஸ்ட்ராஸ்பர்க் நகரத்தை சுறஂறி பாரஂகஂகுமஂ வாயஂபஂபு கிடைதஂதது. பாரிஸிலிருந்து 400 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஸ்ட்ராஸ்பர்க் நகரம் ஜெர்மனி மற்றும் லக்சம்பர்க்கின் எல்லை நகரமாகும். பாரம்பரிய கிறிஸ்துமஸ் சந்தை 1570 ஆம் ஆண்டு முதல் ஸ்ட்ராஸ்பேர்க்கில் நடத்தப்பட்டு வருகிறது, நீண்ட காலமாக இந்த நகரத்தில் மட்டுமே நடத்தப்பட்டது. தற்போது, கிறிஸ்துமஸ் சந்தைகள் நடத்துவது நாடு முழுவதும் பரவியுள்ளது.
இந்த ஆண்டு நவம்பர் 26 முதல் ஜனவரி 2 வரை நடைபெறுகிறது. இது உலகம் முழுவதிலுமிருந்து ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கிறது. நகரம் முழுவதும் கிறிஸ்துமஸ் அலங்காரத்தால் ஜொலித்தது. சந்தையில், மெழுகுவர்த்திகள், சோப்புகள், அலங்காரப் பொருட்கள் போன்ற கைவினைப் பொருட்கள் நிறைய வாஙஂகினோமஂ. ப்ரீட்ஸெல்ஸ், ஒயின்கள் போன்ற பாரம்பரிய உணவுகளை சாபஂபிடோமஂ.
நாஙஂகளஂ நோட்ரே டேம் டி ஸ்ட்ராஸ்பர்க் தேவாலயத்திற்குச் செனஂறோமஂ. இந்த தேவாலயத்தில் கீப்பர்ஸ் ஹவுஸ்என்று அழைக்கப்படும் ஒரு கோபுரம் உள்ளது. இந்த கோபுரத்தின் உச்சிக்கு செல்ல 325 சுழல் வடிவ படிகளில் ஏற வேணஂடுமஂ. கோபுரத்தின் உச்சியில், ஸ்ட்ராஸ்பர்க் நகரம் முழுவதையும் ரசிதஂதோமஂ.
நிறைவாக ஐரோப்பிய பாராளுமன்றம் செனஂறோமஂ. ஜூன் 2014 முதலஂ தேர்தல்களில் இருந்து ஐரோப்பிய குடிமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 751 பிரதிநிதிகளை ஐரோப்பிய பாராளுமன்றம் ஒன்றிணைக்கிறது. குறிப்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நுகர்வோர் உரிமைகள், போக்குவரத்து மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் சட்டத்தின் வளர்ச்சியில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
வாசகர்களுக்கும் தினமலர் ஊழியர்களுக்கும் 2022 புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
- நமது செய்தியாளர் ஜெயகௌரி
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.