மணிமாலா மதியழகன் எழுதிய ‘பெருந்தீ’, ‘தேத்தண்ணி’ ஆகிய இரு சிறுகதைத் தொகுப்பு நூல்கள் 31.12.2021 அன்று, சிங்கப்பூரில் மூத்த எழுத்தாளர் இராம கண்ணபிரான் இல்லத்தில் வெளியீடு கண்டன.
சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தின் மீது அதீத பற்றுகொண்டவரான மூத்த எழுத்தாளர் இராம கண்ணபிரான் நூல்களை வெளியிட,பொதுத்துறை ஊழியர்களின் ஒருங்கிணைந்த தொழிற்சங்கத்தின் ‘ஐ டி இ’ கிளையின் தலைவரும், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலவை உறுப்பினருமான இரா.அன்புச்செல்வன் ‘பெருந்தீ’ என்னும் நூலையும், ‘ஆர்யா கிரியேசன்ஸ்’ உரிமையாளரும், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் பொருளாளருமான பிரேமா மகாலிங்கம் ‘தேத்தண்ணி’ என்னும் நூலையும் பெற்றுக்கொண்டனர்.
பொதுவெளியில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் இந்நிகழ்ச்சி சுருக்கமாக அமைந்தது. 6.2.2022 அன்று ‘சூம்’ வழியாக நடைபெறவுள்ள ‘கதைக்களம்’ நிகழ்ச்சியின்போது இவ்விரு நூல்களும் அறிமுகம் காணவுள்ளது.
- நமது செய்தியாளர் வெ.புரு ேஷாத்தமன்
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.