சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும், சிங்கப்பூரிலேயே மிக உயரமான 24 அடி உயர ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி ஜெயந்தி மகோற்சவம் டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற்றது. ஈரேழு பதினான்கு லோகத்தையும் ரட்சித்து வரும் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனுக்கு இரண்டு வாகனங்கள். கருட பகவான், ஆஞ்சநேயர். பெரிய திருவடி, சிறிய திருவடி என்று அழைக்கப்படுவதுண்டு.
சிறிய திருவடியான ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி ஜெயந்தி மார்கழித் திங்கள் அமாவாசை மூல நட்சத்திரத்தில் வருகிறது. இதையொட்டி ராமர் ஆலயத்தில், தலைமை அர்ச்சகர் வைகானஸ யஷோ பூஷணம் அம்மன்குடி வெ. ஸ்ரீநிவாச பட்டாச்சார்யார் தலைமையில் விசேஷ மூல மந்திர ஹோமம், லட்சார்ச்சனை மிகச் சிறப்பாக நடைபெற்றது. புனித கலசம் ஆலயம். வலம் வரப் பெற்று விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. ஸ்ரீ ஆஞ்ச நேய சுவாமி சந்தனக் காப்பில் ஜொலித்தது கண்கொள்ளாக் காட்சியாகும்.
நிறைவு நாளான ஜனவரி 2 ஆம் தேதி கொட்டும் மழையிலும் ஆயிரக் கணக்கான பக்தப் பெருமக்கள் முக கவசமணிந்து சமூக இடைவெளியில் அணிவகுத்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை தரிசித்தது ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது. பக்தப் பெருமக்களுக்கு காலையில் சுமார் ஆயிரம் பேருக்கும் மாலையில் 750 பேருக்கும் கல்யாண விருந்து பொட்டலங்களாக வழங்கப்பட்டன. அனைத்து ஏற்பாடுகளும் ஆலய மேலாண்மைக் குழுவினரால் மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தது.
- நமது செய்தியாளர் வெ. புருஷோத்தமன்
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.