பாரதியின் கவிதைகளின் முக்கியத்துவத்தையும், அது தமது வாசகர்கள் மற்றும் சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும் எடுத்துரைக்கும் முயற்சியை, தமிழ் மொழிப் பண்பாட்டுக் கழகம் பாரம்பரியமாக மேற்கொண்டு வருகின்றது. தமிழ் மொழி பண்பாட்டுக் கழகத்தின் பாரதியார்விழா, 2021 டிசம்பர்26ஆம் தேதி ஜூம் செயலிவழி நடைபெற்றது.
பாரதியார் விழாவையொட்டி, பாரதியின் புதிய ஆத்திச்சூடியை மையமாகக் கொண்டு வெவ்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் 150 மாணவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். பாரதியின் அகவையை குறிக்கும் வண்ணம், அவர்களில் 39 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் அளிக்கப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் மு.ஹரிகிருஷ்ணன் முத்துசாமி பரிசுகளை வழங்கினார்.
2021 ஆம் ஆண்டின் பாரதியார் விழா போட்டிகளின் தொகுப்பு ஒளிக்காட்சி திரையிடப்பட்டு விழா துவங்கியது. ஸ்வப்னா ஆனந்த் தமிழ்மொழி வாழ்த்து பாடினார். சிங்கப்பூர் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் மு. ஹரிகிருஷ்ணன் ஐயா வரவேற்புரை வழங்கினார். வரவேற்புரையில் தன் மனம் கவர்ந்த பாரதியின் பாடல்களை பற்றியும் பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்திருந்த வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் மனோகரன் சுப்பையா வாழ்த்துரை வழங்கினார். அவருடைய வாழ்த்துரையில் பாரதியின் கவிதைகளால் ஈர்க்கப்பட்ட அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
ஒவ்வொரு ஆண்டும் சமூகத்திற்கும் தமிழ்மொழிக்கும் சிறப்பாக தொண்டாற்றிய ஒருவருக்கு பாரதியார் விருது வழங்கப்படுகிறது. இவ்வாண்டின் விழாவில், ‘பாரதியார் விருது’ முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணனுக்குவழங்கப்பட்டது. இவர், சிங்கப்பூர் அரசின் கல்வி நிறுவனமான குவாங்யாங் உயர்நிலைப்பள்ளித் தமிழ்மொழி மையத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 30 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் மாணவர்களின் தமிழ் மொழிக் கற்றல் திறன் மேம்படவும் இவர் கல்விப்பணியையும் இலக்கியப் பணியையும் இடையறாது ஆற்றிவருகின்றார்.
சிங்கப்பூரில் நிகழும் பட்டிமண்டபம், உரையரங்கம், கவியரங்கம் மாணவர் பயிலரங்கம் எனப் பங்கு பெற்று இலக்கியசேவை ஆற்றி வருகின்ற இவர் சிங்கப்பூர் மாணவர்கள் தமிழ்மொழியை ஆர்வமாகக் கற்பதற்கும் சிங்கப்பூரில் தமிழ் மொழி என்றும் வாழும் மொழியாக நாளும் தழைப்பதற்கும் உழைத்து வருகின்றார்.
மலேசியாவில் இருந்து இணைந்த வழக்கறிஞர், வானொலி மற்றும் சின்னத்திரை புகழ் பாண்டித்துரை, ‘குரங்கும்குயிலும்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். பாரதியின் காதலைப் பற்றி, “சுட்டும்விழிச்சுடர்தான், -கண்ணம்மா சூரியசந்திரரோ?” என்ற பாடலுடன் துவங்கி, பாரதியாரின் குயில்பாட்டில் உள்ள ‘குயிலும்குரங்கும்’ என்ற பாடலின் வழி ஆழமான கருத்துக்களை, நகைச்சுவையோடு விளக்கமாக எடுத்துக் கூறினார்.
இவ்வாண்டு பாரதியார் விழாவின் ஏற்பாட்டு குழு தலைவர்கள் மைக்கேல்ஜோசப் மற்றும் பழனி சங்கரநாராயணன். ஏற்பாட்டுகுழு தலைவர் மைக்கேல்ஜோசப் நன்றியுரை வழங்க, விழா இனிதே நிறைவுற்றது.
- நமது செய்தியாளர் வெ.புரு ேஷாத்தமன்
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.