சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்

ஜனவரி 06,2022 

Comments

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. மச்சாவதாரம் முதல் கல்கி அவதாரம் வரை விக்ரகங்கள் கும்பத்தில் ஆவாஹணம் செய்யப்பட்டு காலையிலும் மாலையிலும் வைகானஸ ஆகம முறைப்படி ஹோமங்கள், தலைமை அர்ச்சகர் வைகானஸ யஷோபூஷணம் அம்மன்குடி வெ. ஸ்ரீநிவாச பட்டாச்சார்யார் தலைமையில் 14 அர்ச்சகர்கள் அமர்ந்து ஹோமங்கள் செய்ய உள்ளனர்.

நிறைவு நாளான 14 ஆம் தேதி வைகறையில் திருப்பள்ளி எழுச்சிக்குப் பின்னர் சொர்க்க வாசல் திறப்பு கோலாகலமாக நடைபெறவுள்ளது. சகஸ்ரநாம அர்ச்சனை இடைவிடாமல் நடைபெறும். பக்தர்கள் பஜ னையும் உண்டு. துவாதசி பூஜையும் மகர சங்கராந்தியும், ஆராதனமும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தப் பெருமக்களுக்கு துவாதசி விருந்தும் குறைவற நடைபெறும்.

கோவிட் சூழல் கருதி இரவு பக்தர்கள் கண்விழிப்பு இருக்காது. முக கவசமணிந்து சமூக இடைவெளி காத்து வைகுண்ட ஏகாதசி மகோத்ஸவத்தில் கலந்து கொள்ள ஆலயம் அன்புடன் அழைக்கிறது.

- நமது செய்தியாளர் வெ. புருஷோத்தமன்

Advertisement

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பாரீசில் வைகுண்ட ஏகாதசி

பாரீசில் வைகுண்ட ஏகாதசி...

தன்சானியாவில் வைகுண்ட ஏகாதசி உத்சவம்

தன்சானியாவில் வைகுண்ட ஏகாதசி உத்சவம் ...

மாலத்தீவில் பொங்கல் சிறப்பு பட்டிமன்றம்

மாலத்தீவில் பொங்கல் சிறப்பு பட்டிமன்றம்...

உலகச் சாதனை குறும்படம் "அறி" பொங்கலுக்கு வெளியீடு

உலகச் சாதனை குறும்படம் "அறி" பொங்கலுக்கு வெளியீடு...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us