'வாழ்வியல்இலக்கியப்பொழில்' அமைப்பின்51-ஆவதுமாதாந்திரநிகழ்ச்சி 08-01-2022 (சனிக்கிழமை) அன்றுமாலை 6.00 மணிக்கு ZOOM வழியாகநடைபெற்றது. ‘வாழ்கநிரந்தரம்’ என்ற தமிழ் வணக்கப் பாடலோடு வரவேற்பு தமிழன்னைக்கு. தொடர்ந்து வாழ்வியல் இலக்கியப் பொழிலின் 'பொழில்' வாழ்த்துப்பாடல் இசைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முனைவர் ஜெ.சி.தேன்மொழியாள் மாலைப்பொழுதில் இலக்கியப்பொழிலில் இளைப்பாற இணையம்வழி இணைந்தோர் யாவரையும் வரவேற்று மகிழ்ந்தார்.
சிறுவர்கள் பங்கேற்கும் அங்கத்தில், அபூர்வா திருக்குறள் சிலவற்றையும், தமிழ்ப்பாடல்கள் சிலவற்றையும் அழகுற பாடினார். ஜீவஜோதிகா சிலப்பதிகாரத்தில் வரும் சில பாடல்களை வழங்கினார். சிறுவர் அங்கத்தினைத் தொடர்ந்து, பெரியவர்கள் அங்கத்தில் ,வாழ்வியல் இலக்கியபொழில் அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி 'கடுகு“ என்னும் தலைப்பில் அறிமுகவுரை வழங்கினார். ‘வெண்கடுகு’ சங்கஇலக்கியத்தில் ‘ஐயவி’ சொல்லாக வழங்கப்படுவதையும் அருமையாக விளக்கினார். புறநானூறு (பாடல்கள் 98 - 281) மற்றும் நற்றிணை (பாடல்கள் 40 - 370) ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளது பற்றிய பல அரிய செய்திகளை தொகுத்தும் வழங்கினார்.
அதன்பிறகு, சென்னையிலிருந்து முனைவர் ச.பிரியா 'நாலடியாரில்நட்பு' என்னும்தலைப்பில், பல பாடல்களை எடுத்துக் கூறி அருமையான சிறப்புரையாற்றினார். மேலும் நாலடியாரில் எவ்வகை நட்புகள் வகைப்படுத்தப்ட்டுள்ளன என்பது பற்றியும் விலங்குகளில் யானை, நாய் பற்றிய உவமைகள், மரங்களில் பனை, பாக்கு தேக்கு மரங்களின் உவமைகள் என நட்பு பற்றிய பல அரிய தகவல்களையும் தெளிவாக தொகுத்து வழங்கினார்.
அடுத்து, சித்தமருத்துவ குறிப்பு அங்கத்தில், சாவித்திரி சில எளிமையான சித்த மருத்துவ குறிப்புகளை சில நகைச்சுவை கதைகளோடு சேர்த்து அருமையாக எடுத்து கூறினார். அடுத்து, கருத்துகேட்பு அங்கத்தில், பேராசிரியர் கல்விராயன்; அசோக் கிருஷ்ணன் ஆகியோர் வாழ்வியல் இலக்கியப்பொழில்-051 நிகழ்ச்சியின் சிறப்பு மற்றும் பேச்சாளர்களின் உரைபற்றி தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
நிகழ்ச்சியின் காணொளியை முகநூல் வழியாக நேரலையாகவும் ஒளிபரப்பி வந்தார் ஆசிரியை மஹ்ஜபீன். மேலும், இந்நிகழ்வு ‘பொழில்அகம்’ வலையொளி வழியாகவும் ‘பொழில்பண்பலை’ வழியாகவும் முகநூல் நேரலையாகயும் ஒளிபரப்பபட்டது, பல்வேறு நாடுகளை சேர்ந்த தமிழ் சான்றோர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கேட்டு மகிழ்ந்தனர்.
இல்லத்தில் இருந்தபடி நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே, முனைவர் ஜெ.சி.தேன்மொழியாள் அழகுற நிகழ்ச்சியை நெறிப்படுத்த, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாவருக்கும் நன்றியை வழங்கியவுடன், சிறப்பானநிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
முகநூலில்கண்டுகளிக்க:
https://www.facebook.com/vazhviyalilakkiyapozhil.sg/videos/229968619196382
அமைப்பின்இணையப்பக்கம்:
https://www.ilakkiyapozhil.com
- தகவல்: எல்ல.கிருஷ்ணமூர்த்தி, வாழ்வியல்இலக்கியப்பொழில், சிங்கப்பூர்.
- நமது செய்தியாளர் வெ.புரு ேஷாத்தமன்
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.