உலகச் சாதனை குறும்படம் "அறி" பொங்கலுக்கு வெளியீடு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

உலகச் சாதனை குறும்படம் "அறி" பொங்கலுக்கு வெளியீடு

ஜனவரி 12,2022 

Comments

தற்கொலை பற்றிய விழிப்புணர்வு மற்றும் முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்ற கருத்தை மையமாக வைத்து தயாரித்த அறி என்ற குறும்படத்தின் விளம்பர தட்டியை, சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கத்தின் தலைவர் குணசீலன் வெளியிட, இயக்குநர் மில்லத் அகமது பெற்றுக்கொண்டார். வரும் பொங்கல் சனிக்கிழமை அன்று அதிகாரப்பூர்வமாக மில்லத் வீடியோ சர்வீஸ் என்ற யூடியூப் ஒளியலையில் குணசீலன் வெளியீடு செய்கிறார்.

"ஏழு நிமிடத்தில் தனி ஒரு கதாபாத்திரமாக, வசனம் பேசாமல், தன் முகப் பாவனைகள் மூலம் மிக சிறப்பாக நடித்து ஒரு நல்ல கருத்தை மக்களுக்குச் சொல்லியிருக்கிறார். இக்குறும்படம் சில விருதுகளும், உலக சாதனையும் செய்துள்ளது. எங்கள் கலைஞர்கள் சங்கத்தின் மூலம் எங்கள் வாழ்த்துக்களை கூறி மகிழ்கிறோம்" என்கிறார் குணசீலன்.

"என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா" என்ற திரைப்படத்தின் இயக்குநர் நவீன் மணிகண்டன், "இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் சிறப்பாக கதை சொல்லியிருக்கிறார். மனிதன் என்பவன் போராட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் மிக பயனுள்ள குறும்படம் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும்" என்றார்.

மேலக்காண்டை மகாகவி பாரதி கலை இலக்கிய மன்ற செயலாளர் கவிஞர் தமிழ்ப்பிரியன், "ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல்வேறு திறமைகள் மறைந்து கிடக்கின்றன. அதனை அறிந்தவன் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான் என்பதை அறி குறும்படம் அருமையாக விளக்குகிறது, இதுபோல பல குறும்படங்களை தயாரித்து நண்பர் மில்லத் சமூகத்திற்குத் தொண்டாற்ற வேண்டும்" என்றார்.

குறும்படத்திற்கு வசனம் பேசிய கவிஞர் பானு சுரேஷ், மோனலிசா, அஃபீஃபா, சியா லிம், இசையமைத்த பால் மற்றும் ஒளிப்பதிவு செய்த அலிஃப் அஹ்மது ஆகியோருக்கு இயக்குநர் நன்றி தெரிவித்தார்.

- நமது செய்தியாளர் வெ.புரு ேஷாத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்...

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்...

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022 ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us