காணும் பொங்கல் அன்று உலகளாவிய இளம் தமிழர் குழு ஒரு தமிழ் கணிப்பான் வெளியிடும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது. கண்ணும் எழுத்தும் கண்ணென தகும், எண் எழுத்து இகழேல், எண்ணும் எழுத்தும் இவ்விரண்டும் கண்ணெனத் தகும் வாழும் உயிர்க்கு என்ற பல மொழிகளையும் கொண்ட தமிழ் மொழியில் தமிழிலேயே கணக்குகளை போடும் கணிப்பான் உருவாக்கி அதை வெளியிடும் நிகழ்வாக இது அமைந்தது.
குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர், வேல் கடம்பன் என்ற டார்வின் கண்ணா அவர்கள் தமிழில் கூட்டல் பெருக்கல் கழித்தல் வகுத்தல் மற்றும் இதர செயல்களை செய்யும் தமிழ் கணிப்பான் செயலியை உருவாக்கியுள்ளார். இதில் நாம் தமிழரது எழுத்து முறையையும் என் முறையையும் அறிந்து கொள்ள முடியும். அந்த செயலியை எப்படி பயன்படுத்தலாம் என்பதை அவர் விளக்கிக் கூறினார்.
மேலும் இந்தக் கணிப்பான் நம் பண்டைய தமிழ் எழுத்துக்களை பயனுக்கு கொண்டுவருவதில் துணைபுரியும் என்று அதை வெளியிட்டு சிறப்பித்த பல்துறை தமிழ் ஆய்வாளர் மற்றும் கடல்சார் ஆய்வாளர் திரு. ஒரிசா பாலு ஐயா அவர்கள் தெரிவித்தார்கள். தமிழ்மொழி ஒன்றே மிகவும் அதிகமான எண்களுக்கு பெயரும் வடிவமும் வடிவத்தையும் மற்றும் மிகக் குறைவான தசம எண்களுக்கும் பெயர்களை கொண்ட மொழி என்பதையும் எடுத்துக் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்ட நார்வே நாட்டிலிருந்து திரு. இங்கர்சால் அவர்கள் தன்னுடைய பாராட்டை தெரிவித்ததோடு அல்லாமல் இன்னும் மேலும் என்னென்ன தமிழ் செயலிகளை அவரது குழுவினர் செய்திருக்கிறார்கள் என்பதை எடுத்துக்கூறி இந்தக் குழுவினர் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அழகாக விளக்கினார்.
டார்வின் கனவிற்கு தென் கொரியாவில் இருந்து திருமதி. சைலஜா அவர்கள் இரண்டாம் ஆண்டு கல்லூரியில் படிக்கும் மாணவனுக்கு இவ்வளவு ஆர்வமா என்று வியந்து அவருடைய செயலை பாராட்டினார். ஹாங்காங்கில் இருந்து முனைவர் சித்ரா அவர்கள் இந்தச் செயலியை பயன்பாட்டிற்கு கொண்டு வர என்ன செய்யலாம் என்பதை குழுவினருடன் கலந்தாலோசித்தார். தமிழ் மொழிக்குத் தேவையான தொண்டுகளைச் செய்ய இந்தக் குழுவினர் தயார் நிலையில் இருப்பதாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செயலியை தரவிறக்கம் செய்ய கீழ்கண்ட முகவரியை பயன்படுத்தவும்
https://play.google.com/store/apps/details?id=appinventor.ai_vaankonofficial.Tamil_Calculat
செயலுக்குத் தேவையான விஷயங்களை அறிந்துகொள்ள கீழ்கண்ட முகவரியை பயன்படுத்தவும்.
Meaning of Tamil numbers and Symbols
https://vaankon.com/tamil-numerals-and-symbols/
மேலும் இந்த செயலியை மற்றவர்களிடமும் பகிர்ந்துகொண்டு, அந்த இளம் ஆர்வலரை ஆதரிக்கும்படி வேண்டுகிறோம் என்று நிகழ்வின் இறுதியில் அனைவரும் வேண்டிக்கொண்டனர்.
- நமது செயதியாளர் சித்ரா
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.